Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: உலகிலேயே எந்த அணியும் நினைத்துக் கூடப் பார்க்காத மெகா சாதனையை செய்த இந்திய அணி

திருவனந்தபுரம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி இமாலய ஸ்கோரை எட்டியது. இந்தத் தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் சிக்ஸர் மழையாகப் பொழிந்துள்ளனர். இதன் மூலம் ஒரு வரலாற்றுச் சாதனையை இந்தியா படைத்துள்ளது. ஒரு இருதரப்பு டி20 தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா தன்வசப்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நியூசிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஒரு போட்டியில் மட்டுமே இந்திய அணி 23 சிக்ஸ் அடித்தது. இந்த தொடரில் ஒட்டு மொத்தமாக 69 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு இருக்கிறது.

IND vs NZ 5th T20I Team India Sets New World Record for most Sixes in a bilateral series

உலக சாதனை படைத்த சிக்ஸர் மழை

இந்தியா: 69 சிக்ஸர்கள் (எதிர் நியூசிலாந்து, 2026)
இங்கிலாந்து: 64 சிக்ஸர்கள் (எதிர் மேற்கிந்திய தீவுகள், 2023)
ஆஸ்திரேலியா: 64 சிக்ஸர்கள் (எதிர் மேற்கிந்திய தீவுகள், 2025)

இந்தப் போட்டியில் மட்டும் இந்திய வீரர்கள் மொத்தம் 23 சிக்ஸர்களை விளாசியுள்ளதும் ஒரு சாதனையாக மாறி உள்ளது. ஒரு சர்வதேச டி20 போட்டியில் முழு அங்கீகாரம் பெற்ற அணி ஒன்றுக்கு எதிராக, ஒரு இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இந்த மோசமான சாதனையை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சந்தித்துள்ளனர்.

இஷான் கிஷன் மிரட்டல் சதம்

சொந்த ஊரில் சஞ்சு சாம்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தாலும், அவருக்குப் பின் களமிறங்கிய இஷான் கிஷன் மைதானத்தை அதிரடியால் அதிர வைத்தார். நியூசிலாந்து பந்துவீச்சாளர்களைப் பந்தாடிய அவர், வெறும் 43 பந்துகளில் 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது இன்னிங்ஸில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும். இந்தச் சதத்தின் மூலம் உலகக்கோப்பை அணியில் தனக்கான இடத்தை இஷான் கிஷன் ஏறக்குறைய உறுதி செய்துவிட்டார்.

சூர்யா, ஹர்திக் பாண்டியா விளாசல்

கேப்டன் சூர்யகுமார் யாதவ் வழக்கம் போல் தனது பாணியில் விளையாடி 30 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 42 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை 270க்கு மேல் கொண்டு சென்றார். சிவம் துபே 2 பந்துகளில் 7 ரன்கள் எடுத்தார்.

நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். மிட்செல் சான்ட்னர் 60 ரன்களையும், கைல் ஜேமிசன் 59 ரன்களையும், ஜேக்கப் டஃபி 53 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். 272 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களமிறங்கியது.பின்னர் நியூசிலாந்து அணி 225 ரன்கள் மட்டுமே எடுத்தது, இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Story first published: Sunday, February 1, 2026, 5:35 [IST]
Other articles published on Feb 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+