Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: எங்கள் டி20 அணி ரொம்ப பாவம்.. ஒருநாள், டெஸ்ட் அணிக்கு கூட இந்த பிரச்சினை இல்லை- கம்பீர்

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-2 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய போதிலும், அடுத்து வரவிருக்கும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு முறையான திட்டமிடல் தேவை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் தொடரைத் தொடர்ந்து உடனடியாக நியூசிலாந்து தொடர் அமைந்ததால், டி20 போட்டிகளுக்கு விரிவாக திட்டமிடப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்று கம்பீர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இருப்பினும், வரவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்குத் தெளிவான திட்டங்கள் கைவசம் உள்ளதாக அவர் கூறினார்.

Gambhir

டெஸ்ட் அணியில் இடம்பெறும் பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் அங்குள்ள சூழலுக்குப் பழகும் வகையில், குறைந்தது ஒரு நான்கு நாள் போட்டியிலாவது விளையாட வேண்டும் என்று விரும்பியதாக கம்பீர் குறிப்பிட்டார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி செய்ய நேரம் கிடைக்கும் என்பதால், டி20 அணிக்குத்தான் இந்தச் சுற்றுப்பயணம் அதிக சவாலாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

IND vs NZ: சஞ்சு சாம்சனை விமர்சித்த நெட்டிசன்.. பங்கமாக கலாய்த்த அஸ்வின்

IND vs NZ: சஞ்சு சாம்சனை விமர்சித்த நெட்டிசன்.. பங்கமாக கலாய்த்த அஸ்வின்

டி20 அணியில் விளையாடிய 70 முதல் 80 சதவீத வீரர்கள் முதன்முறையாக நியூசிலாந்துக்குச் சென்றுள்ளனர். அங்குள்ள வானிலை மற்றும் ஆடுகளச் சூழல்களை அவர்கள் உடனடியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கம்பீர் தெரிவித்தார்.

ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா போன்ற அனுபவமிக்க வீரர்கள் அணியில் இல்லாத நிலையில், அனுபவமற்ற பந்துவீச்சு வரிசையைக் கொண்டு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் திறம்படச் செயல்பட்டார் என்று கம்பீர் பாராட்டினார். கைவசம் இருந்த வீரர்களை வைத்துக் கொண்டு அவர் அணியை சிறப்பாக வழிநடத்தினார் என்றும் தெரிவித்தார்.

IND vs NZ: பேட்டர்களை பற்றி பேசாதீங்க.. பவுலர்களை பாராட்ட செய்யுங்கள்.. கம்பீர் ஆவேசம்

Also Read

IND vs NZ: பேட்டர்களை பற்றி பேசாதீங்க.. பவுலர்களை பாராட்ட செய்யுங்கள்.. கம்பீர் ஆவேசம்

ஹேமில்டனில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் டிம் சீஃபர்ட் 93 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும், ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Story first published: Sunday, November 1, 2026, 20:36 [IST]
Other articles published on Nov 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+