Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- அவ்வளவு தான் நம்மல முடிச்சி விட்டீங்க போங்க! 3வது டெஸ்டில் முக்கிய பவுலருக்கு ஓய்வு?

மும்பை : இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை வெள்ளிக்கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவி தொடரை இழந்து விட்டது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்றால் ஒயிட் வாஸ் செய்யப்படுவதில் இருந்து இந்திய அணி தப்பிக்கலாம். இந்த தருணத்தில் இந்திய அணியில் முக்கிய வீரரான பும்ரா மும்பை டெஸ்டில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

ind vs nz jasprit bumrah rohit sharma virat kohli

பும்ரா கடந்த இரண்டு டெஸ்ட்களில் சரியாக செயல்படவில்லை. இதனால் அவர் உடலளவில் மிகப்பெரிய சுமையை சந்தித்து இருப்பதால், அவருக்கு ஓய்வு வழங்க ரோகித் சர்மா முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மனதளவிலும் உடல் அளவிலும் பும்ரா ஓய்வு எடுத்துக் கொண்டால், அடுத்து ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும்.

ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி இழந்த வீட்ட நிலையில் ஆஸ்திரேலிய தொடரிலாவது பும்ரா சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதற்காக இந்த முடிவை கம்பீர் ரோகித் சர்மா எடுத்து இருப்பதாக தெரிகிறது. இதனால் ஹர்ஷித் ரானா மும்பை டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஒருவேளை ஹர்ஷித் ராணா பிளையிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்றால் அவருக்கு பதில் முகமது சிராஜ் அணிக்கு திரும்பலாம். ஏற்கனவே இந்திய அணி பந்துவீச்சில் விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில்,பும்ரா போன்ற ஒரு வீரர் இல்லை என்றால் அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்தியன் இருக்கும்போது இதுபோல் ஒரு விஷப் பரிட்சை தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.எனினும் போட்டி தொடங்குவதற்கு முன்பே பும்ரா குறித்து 100% அப்டேட் வெளியாகும்.

Story first published: Thursday, October 31, 2024, 17:16 [IST]
Other articles published on Oct 31, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+