Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்தியா தோல்வியை பற்றி கவலைப்பட தேவையில்லை.. இந்த 2 வீரர் சேர்த்திருக்கனும்- கார்த்திக்

ஆக்லாந்து: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 260 ரன்கள் என்ற இலக்கை துரத்த முடியாமல் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி மாபெரும் வெற்றியை பெற்று நடையில் இந்த போட்டி பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

எனினும் இந்த தோல்வி குறித்து இந்திய அணி ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.இது குறித்து பேசி அவர், இது இந்திய அணிக்கு அரிதாக ஏற்படும் ஒரு மோசமான நாள் மட்டுமே என்று கூறினார்.

Ind vs NZ

நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாகத் திட்டமிட்டு பந்துவீசியதாகப் பாராட்டிய அவர், அபிஷேக் சர்மாவுக்கு ரன் அடிக்க இடம் கொடுக்காமல் அவர்கள் கட்டுப்படுத்தியதைச் சுட்டிக்காட்டினார். வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி ஏற்கனவே தன் திறமையை நிரூபித்துள்ளதால், ரசிகர்கள் இந்த ஒரு தோல்வியைக் குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

IND vs NZ: 57 ரன்களில் கிளன் பிலிப்ஸ் கொடுத்த ஈஸி கேட்ச்.. கோட்டை விட்ட நமன் தீர்.. ஆட்டத்தை மாற்றிய தருணம்

IND vs NZ: 57 ரன்களில் கிளன் பிலிப்ஸ் கொடுத்த ஈஸி கேட்ச்.. கோட்டை விட்ட நமன் தீர்.. ஆட்டத்தை மாற்றிய தருணம்

இந்திய அணி பேட்டிங் பலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, முன்னணி சுழற்பந்து வீச்சாளர் இல்லாமல் ஒரே கூட்டணியுடன் களமிறங்கியது. கடைசி 7 போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளர்கள் 220 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக்கொடுப்பது இது மூன்றாவது முறையாகும். பிளாட் விக்கெட்டுகள், சிறிய எல்லைகள் மற்றும் ஒரு பந்துவீச்சாளர் குறைவாக ஆடும் இந்திய அணியின் உத்தி ஆகியவையே எதிரணிகள் அதிக ரன்கள் குவிக்கக் காரணம் என தினேஷ் கார்த்திக் கூறினார்.

IND vs NZ: இந்தியா சேஸ் செய்துவிடலாம் என நினைத்தது.. ஆனால் நியூசிலாந்து ஒரு படி மேல் போய்விட்டது- ராயூடு

Also Read

IND vs NZ: இந்தியா சேஸ் செய்துவிடலாம் என நினைத்தது.. ஆனால் நியூசிலாந்து ஒரு படி மேல் போய்விட்டது- ராயூடு

வருண் சக்கரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் போன்ற முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களை அணியில் சேர்த்தால் ஆட்டத்தின் போக்கே மாறியிருக்கும் என கார்த்திக் கருத்து தெரிவித்தார். நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் சிறப்பாக பந்துவீசி வரும் நிலையில், வருண் அல்லது குல்தீப் சேர்க்கப்பட்டால் அணிக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.இந்தத் தொடரின் இறுதி டி20 போட்டி ஹேமில்டனில் உள்ள செட்டன் பார்க் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

Story first published: Friday, October 30, 2026, 19:16 [IST]
Other articles published on Oct 30, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+