IND vs NZ: இந்தியா சேஸ் செய்துவிடலாம் என நினைத்தது.. ஆனால் நியூசிலாந்து ஒரு படி மேல் போய்விட்டது- ராயூடு
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் 260 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய இந்திய அணி 172/9 ரன்கள் மட்டுமே எடுத்து 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சமீபத்திய சேஸிங் சாதனைகளின் அடிப்படையில் இந்திய அணி நிர்வாகம் இந்த போட்டியை வென்றுவிடலாம் என நம்பியிருக்கலாம், ஆனால் நியூசிலாந்து அணி இந்தியாவை விட ஒரு படி மேலே செயல்பட்டதாக முன்னாள் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணிக்கு இந்த தொடரில் இது முதல் தோல்வியாகும்.போட்டியின் முதல் ஓவரிலேயே இந்தியாவின் வெற்றி வாய்ப்பு சரிவைச் சந்தித்தது. ஜேக்கப் டஃபி வீசிய முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் 4 ரன்களிலும், இஷான் கிஷன் ரன் எதுவுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

பவர்ஃபிலேயின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்து தடுமாறியது. நமன் திர் 13 பந்துகளில் 28 ரன்களும், திலக் வர்மா 35 பந்துகளில் 35 ரன்களும் எடுத்தனர். முந்தைய போட்டியில் சதம் அடித்த அபிஷேக் சர்மா 15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முந்தைய போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி இலக்கை எட்டியிருந்தது. தொடரின் முதல் போட்டியில் கிறிஸ்ட்சர்ச்சில் தனது மிகப்பலமான சேஸிங்கை பதிவு செய்த இந்தியா, வெலிங்டனில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் 199 ரன்களை 13.2 ஓவர்களில் சேஸ் செய்திருந்தது.
இது குறித்து பேசிய அம்பத்தி ராயுடு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலுமே இந்திய அணி பின்னடைவைச் சந்தித்ததாகக் கூறினார். இந்த ஆட்டத்தை எளிதாக வென்றுவிடலாம் என இந்திய அணி நினைத்திருக்கலாம், ஆனால் நியூசிலாந்து அணி சவாலை முறியடித்து தன் திறமையை நிரூபிக்க விரும்பியதாக அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications


