Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: 10 பந்தில் 3 விக்கெட்.. ரிங்கு சாதாரண ஆளே இல்லை.. பவுலிங் வித்தையை காட்டி அசத்தல்

திருவனந்தபுரம்: நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் கடைசி விக்கெட்டை வீழ்த்தினார் ரிங்கு சிங். இதன் மூலம் அவர் நம்ப முடியாத ஒரு பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 272 ரன்கள் என்ற இமால இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 225 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

பந்துவீச்சாளரான ரிங்கு சிங்

இந்திய அணியின் வெற்றி ஒருபுறம் இருந்தாலும், பகுதிநேரப் பந்துவீச்சாளராகக் களமிறங்கிய ரிங்கு சிங் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே பந்துவீசியிருந்த அவர், இந்தப் போட்டியின் கடைசி ஓவரில் பந்துவீச அழைக்கப்பட்டார்.

IND vs NZ India vs New Zealand 5th T20I Rinku Singh Shines with Ball as India Crushes New Zealand

19.4வது ஓவரில் இஷ் சோதி அடித்த பந்தை அர்ஷ்தீப் சிங் கேட்ச் பிடிக்க, ரிங்கு சிங் தனது டி20 வாழ்க்கையில் இரண்டாவது முறையாக பந்து வீசி மூன்றாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். மொத்தம் 4 பந்துகள் வீசிய அவர் 7 ரன்களை விட்டுக்கொடுத்து இந்த விக்கெட்டை வீழ்த்தினார்.

முன்னதாக இலங்கைக்கு எதிரான போட்டியிலும் 1 ஓவர் வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆகமொத்தம் சர்வதேச டி20 போட்டிகளில் 10 பந்துகள் வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் ரிங்கு சிங். அவர் வெறும் அதிரடி பேட்ஸ்மேன் என நினைத்து வந்த நிலையில் கைவசம் பந்துவீச்சும் உள்ளது என்பதை காட்டி இருக்கிறார் ரிங்கு சிங்.

அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட் சாதனை

இந்தியப் பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் தனித்துத் தெரிந்தார். ஃபின் ஆலன் அதிரடியாக விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களைத் திணறடித்த போதும், அர்ஷ்தீப் சிங் தனது விக்கெட் வேட்டையைத் தொடர்ந்தார். 4 ஓவர்களில் 51 ரன்களை விட்டுக்கொடுத்தாலும், முக்கிய 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். இது சர்வதேச டி20 போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். அக்‌ஷர் படேல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

நியூசிலாந்தின் போராட்டம்

272 ரன்கள் என்ற இமால இலக்கை நோக்கி ஆடிய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் 80 ரன்கள் குவித்து மிரட்டினார். இருப்பினும் மற்ற வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி 19.4 ஓவர்களில் 225 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தொடர் நாயகன்

இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, உலகக்கோப்பைத் தொடருக்குத் தன்னம்பிக்கையுடன் செல்கிறது. இஷான் கிஷனின் சதம் மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் 5 விக்கெட் ஆகியவை இந்த வெற்றியின் முக்கிய அம்சங்களாகும்.

Story first published: Sunday, February 1, 2026, 7:45 [IST]
Other articles published on Feb 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+