Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: நியூசிலாந்தை வைத்து ஐதராபாத் பசங்க பிரியாணியை சமைத்துவிட்டார்கள்.. ஸ்ரீகாந்த் பாராட்டு

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியின் சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டியுள்ள முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை அவர்கள் இருவரும் திறம்பட சமாளித்ததாகக் கூறியுள்ளார். கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 181 ரன்கள் இலக்கை நோக்கிய இந்திய அணி, 14.5 ஓவர்களில் 112 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்தச் சமயத்தில் ஜோடி சேர்ந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி, அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.திலக் வர்மா 26 பந்துகளில் 51 ரன்களுடனும், நிதிஷ் குமார் ரெட்டி 13 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

IND vs NZ

ஏழாவது விக்கெட்டுக்கு இணைபிரியா ஜோடியாக 30 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணி, கடைசி ஓவரில் ஒரு பந்து மீதமிருக்க இந்திய அணியை வெற்றி பெறச் செய்தது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.இந்த வெற்றி குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "ஹைதராபாத் பசங்க இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை வைத்து சரியான முறையில் பிரியாணி சமைத்துவிட்டார்கள்."

IND vs NZ: புவனேஸ்வர் குமார் பவுலிங்கில் பெரிய குறை இருக்கு.. இதை செய்யலனா ரொம்ப கஷ்டம்- அஸ்வின்

IND vs NZ: புவனேஸ்வர் குமார் பவுலிங்கில் பெரிய குறை இருக்கு.. இதை செய்யலனா ரொம்ப கஷ்டம்- அஸ்வின்

"மைதானம் பெரிது என்பதை உணர்ந்து, தேவையின்றி சிக்ஸர்களுக்கு ஆசைப்படாமல் பவுண்டரிகளை அடிப்பவதில் கவனம் செலுத்தினர். இடைவெளிகளைக் கண்டறிந்து புதுமையான ஷாட்களை ஆடியதுடன், திலக் ஒற்றை ரன்களை இரண்டு ரன்களாகவும், இரண்டு ரன்களை மூன்று ரன்களாகவும் மாற்றுவதில் வல்லவராக இருந்தார். நெருக்கடியை மிக அழகாகக் கையாண்ட இருவருமே அழுத்தத்தை அற்புதமாக உள்வாங்கிக் கொண்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, அறிமுக வீரர் நமன் திரின் ஆட்டத்தையும் ஸ்ரீகாந்த் வெகுவாகப் பாராட்டியுள்ளார். தொடரின் முதல் போட்டியில் 15 பந்துகளில் 42 ரன்கள் விளாசி இந்திய அணி சாதனை வெற்றியைப் பெற உதவிய நமன் திர், இரண்டாவது போட்டியிலும் 17 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பை அளித்தார்.

நமன் திர் குறித்து பேசிய ஸ்ரீகாந்த், "இந்திய அணி தோல்வியின் பிடியில் இருந்த இரு போட்டிகளிலுமே நமன் திர் தனது சிறப்பான ஆட்டத்தால் அணியைக் காப்பாற்றினார். 7வது வரிசையில் களமிறங்கி விரைவாக 30 ரன்கள் சேர்ப்பது டி20 போட்டிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். திடீரென அணிக்குள் வந்த அவர், தற்போது அற்புதங்களைச் செய்து வருகிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

IND vs NZ: புவனேஸ்வர் குமாருக்கு கூடுதல் நேரம் தாங்க.. அணியை விட்டு நீக்காதீங்க- முகமது கையிப்

Also Read

IND vs NZ: புவனேஸ்வர் குமாருக்கு கூடுதல் நேரம் தாங்க.. அணியை விட்டு நீக்காதீங்க- முகமது கையிப்

தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ள இந்திய அணி, அக்டோபர் 27 செவ்வாய்க்கிழமை வெலிங்டனில் நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கவுள்ளது.

Story first published: Sunday, October 25, 2026, 18:32 [IST]
Other articles published on Oct 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+