Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செமி பைனல் இல்லை.. இது ஷமி பைனல்.. டாப்புக்கு சென்ற முகமது ஷமி.. 4வது முறையாக 5 விக்கெட்டுகள்!

மும்பை: ஒரு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் ஜாகீர் கான் சாதனையை முறியடித்து முகமது ஷமி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் நியூசிலாந்து அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதையும் முகமது ஷமி தட்டி சென்றுள்ளார். அதேபோல் இன்றைய ஆட்டத்தின் மூலமாக முகமது ஷமி ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார்.

IND vs NZ: List of Records broken by Mohammad Shami in the ICC 50 Over World Cup history

இந்த உலகக்கோப்பை தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள முகமது ஷமி, 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் ஒரே உலகக்கோப்பை தொடரில் 3 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற புதிய சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். இதற்கு முன்பாக மிட்செல் ஸ்டார் 2 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

அதேபோல் உலகக்கோப்பை நாக் அவுட் போட்டிகளில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு 1975 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலிய வீரர் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முறியடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் 2011ஆம் ஆண்டு 21 விக்கெட்டுகள் வீழ்த்தி ஜாகீர் கான் முதலிடத்தில் இருந்தார்.

தற்போது 23 விக்கெட்டுகளை வீழ்த்தி முகமது ஷமி சாதித்துள்ளார். அதேபோல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்களில் ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. தற்போது இந்திய வீரர்களில் முகமது ஷமி முதல்முறையாக 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

Story first published: Wednesday, November 15, 2023, 23:48 [IST]
Other articles published on Nov 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+