Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்திய அணிக்கு கிடைத்த வைரம் இவர்.. 2 பேர் ஆட்டத்தை தான் எதிர்பார்க்கிறேன்.. ரஹானே

மும்பை: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் கவனம் செலுத்த வேண்டிய வீரர்களில் ஒருவராக நமன் தீரை முன்னாள் வீரர் அஜின்கியா ரஹானே தேர்வு செய்துள்ளார். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நமன் தீர், இந்திய அணிக்கு கிடைத்த ஒரு வைரம் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் தலா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, வெலிங்டனில் நடைபெறும் மூன்றாவது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இப்போட்டி குறித்துப் பேசிய ரஹானே, இந்திய அணியில் அபிஷேக் சர்மா மற்றும் நமன் தீர் ஆகிய இருவரின் ஆட்டத்தையும் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

Naman Dhir

அபிஷேக் சர்மா குறித்துப் பேசிய ரஹானே, "இந்திய அணியில் அபிஷேக் சர்மா ரன்கள் குவிப்பதை பார்க்க விரும்புகிறேன். அவர் நல்ல ஃபார்மிலும் நல்ல ரைமிங்கிலும் உள்ளார். அவர் ரன் அடிப்பது இந்திய அணிக்கு நல்ல அறிகுறியாகும். முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் தனது பங்களிப்பை அளித்தார். எனவே அபிஷேக் 50 ரன்களுக்கு மேல் எடுத்தால், அது அவருடைய ஃபார்மிற்கும் நல்லது" என்று தெரிவித்தார்.

PAK vs ENG: ஹாரிஷ் ரவுஃப் செயலால் சர்ச்சை.. இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் உடன் மோதல்

PAK vs ENG: ஹாரிஷ் ரவுஃப் செயலால் சர்ச்சை.. இங்கிலாந்து வீரர் வில் ஜாக்ஸ் உடன் மோதல்

"அவரை தவிர, நமன் தீர் எந்த மனநிலையுடன் விளையாடுகிறார் என்பதையும், அவரது நிதானமான ஆட்டத்தையும் மீண்டும் பார்க்க விரும்புகிறேன். அவர் மிகவும் அமைதியாகவும் பதற்றமின்றியும் விளையாடுகிறார். அந்த வரிசையில் இந்திய அணிக்கு ஒரு வைரம் கிடைத்துள்ளது. அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மீண்டும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்" என்றார்.

நடைபெற்று வரும் இத்தொடரில் அபிஷேக் சர்மா 2 இன்னிங்ஸ்களில் 169.69 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 56 ரன்கள் எடுத்துள்ளார். அதேவேளையில், நமன் தீர் 2 இன்னிங்ஸ்களில் 228.12 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 73 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார்.

IND vs NZ: 3வது டி20 போட்டியிலிருந்து இந்திய அதிரடி வீரர் விலகல்.. பிசிசிஐ அறிவிப்பு

Also Read

IND vs NZ: 3வது டி20 போட்டியிலிருந்து இந்திய அதிரடி வீரர் விலகல்.. பிசிசிஐ அறிவிப்பு

அதே உரையாடலில், நியூசிலாந்து அணியில் கவனம் செலுத்த வேண்டிய வீரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டிம் சீஃபர்ட் ஆகிய தொடக்க ஆட்டக்காரர்களை ரஹானே தேர்வு செய்தார். "நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அவர்களுடன் இணைந்து விளையாடியுள்ளேன். இருவருமே சிறந்த வீரர்கள் மட்டுமின்றி, நல்ல மனிதர்களும் கூட. நியூசிலாந்து வீரர்கள் அனைவருமே பொதுவாகச் சிறந்த மனிதர்கள். இந்த போட்டியில் அவர்களின் அதிரடி ஆட்டம் திரும்புவதைப் பார்க்க விரும்புகிறேன். இருவரும் அதிரடியாக ஆடினால் நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை உயர்த்தும்" என்று ரஹானே குறிப்பிட்டார்.

Story first published: Monday, October 26, 2026, 13:00 [IST]
Other articles published on Oct 26, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+