IND vs NZ: இந்திய வீரர்களை தடுக்க முடியவில்லை.. நெருப்பு போல் ஆடினாங்க.. மிட்செல் சாண்ட்னர் வேதனை
வெலிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 13.2 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டி தொடரை வென்று இருக்கிறது. பவர்பிளேவில் இந்திய அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி 118 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தனர்.
குறிப்பாக அபிஷேக் ஷர்மா 35 பந்துகளில் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த சூழலில் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள நியூஸிலாந்து அணி கேப்டன் மிட்செல் சாண்ட்னர், இந்திய வீரர்களை தடுத்து நிறுத்துவது என்பது மிகவும் கடினமாக இருந்தது.

நாங்கள் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பார்த்திருக்கிறோம். தற்போது நியூசிலாந்து மண்ணிலும் பார்த்திருக்கின்றோம். நாங்கள் பேட்டிங் செய்யும்போது வந்து ஆடுகளத்தில் சாதகமாக இருந்தது. அதையும் மீறி டேரல் மிட்செல் மற்றும் ஜாக்கப் ஆகியோர் அபாரமாக விளையாடி எங்களை 200 ரன்கள் அருகே கொண்டு சென்றனர்.
குறிப்பாக இந்திய அணி வீரர்கள் இறுதி கட்டத்தில் அபாரமாக பந்து வீசினார்கள். நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு இருந்தது. இதனால் பந்து வீசுவது கடினமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் பவர்பிளே என்பது மிகவும் முக்கியமான விஷயம். இந்திய அணி வீரர்கள் பவர் பிளேவில் எப்படி விளையாட வேண்டும் என்பதை எங்களுக்கு சொல்லிக் காட்டி இருக்கிறார்கள்.
அவருடைய பேட்டிங் அபாரமாக இருந்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் எங்கள் அணிக்கு சிறப்பாக செயல்படுவது உண்மையிலே நல்ல விஷயம். நாங்கள் அக்சர் பட்டேல் முதலில் பந்து வீசியதை பார்த்தோம். அப்போது சுழற் பந்துவீச்சு பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இதையே நாங்கள் பிரஸ்வெல் வைத்து செயல்படுத்த முயற்சி செய்தோம். ஆனால் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். நாங்கள் இந்திய வீரர்களை எப்படி தடுத்து நிறுத்துவது என்பதை குறித்து இன்னும் முயற்சி செய்ய வேண்டும். அடுத்த போட்டி இன்னும் சிறிய மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அதில் இந்தியாவை தடுத்து நிறுத்த நாங்கள் வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications


