Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: இந்திய ஒருநாள் அணியில் இந்த ஸ்டார் பேட்ஸ்மேனுக்கு இடமில்லை.. அஸ்வின் கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின், சிறந்த ஃபார்மில் இருக்கும் பேட்டர் இஷான் கிஷானை ஒருநாள் போட்டிக்கான பிளேயிங் லெவனில் தேர்வு செய்வது குறித்துத் தனது வெளிப்படையான கருத்தை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் பேட்டிங் வரிசை தற்போது நிலையாக உள்ளதால், இஷான் கிஷான் போன்ற ஃபார்மில் இருக்கும் வீரருக்குக்கூட தற்போது அணியில் இடம் கிடைப்பது கடினம் என்று அவர் தெரிவித்துள்ளார்.தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில், அவர்களைத் தொடர்ந்து விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர்கள் என அணியின் கட்டமைப்பு உறுதியாக உள்ளது.

Ishan kishan

இது குறித்துப் பேசிய அஷ்வின், "அவர் எங்கே விளையாடுவார்? இடதுகை பேட்டர் தேவைப்பட்டால் ஒழிய, டாப் 3 பேட்டர்கள் நிலையாக உள்ளனர். நான்காவது இடத்தில் ஷ்ரேயாஸ் அல்லது கெய்க்வாட் விளையாடுகிறார்கள். பின்னர் கேஎல் ராகுல் மற்றும் ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். அதனால் அவருக்கு உண்மையில் இடம் இல்லை."

IND vs NZ: ரோகித் சர்மாவை விட இதை செய்ய கோலிக்கு தான் வாய்ப்பு அதிகம்.. புஜாரா கணிப்பு

IND vs NZ: ரோகித் சர்மாவை விட இதை செய்ய கோலிக்கு தான் வாய்ப்பு அதிகம்.. புஜாரா கணிப்பு

"கடந்த 18 மாதங்களில் அவர் செயல்பட்ட விதம் மிகச் சிறப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் யாருடைய இடத்தில் அவர் விளையாடுவார்? இங்குத் திறமையான வீரர்கள் அதிகமாக இருப்பதே பிரச்சனையாக உள்ளது" என்று கூறினார்.

மேலும், ஒரு வீரரை சேர்ப்பதற்காக மற்றொரு வீரரை உடனடியாக நீக்குவது அணியின் சூழலையும் வீரர்களின் மனநிலையையும் பாதிக்கும் என்றும் அஷ்வின் விளக்கினார். "வெளியில் இருந்து பார்க்கும் நமக்கு பல வீரர்களை அணியில் பார்க்க ஆசையாக இருக்கும். ஆனால் ஒரு வீரரை இரண்டு போட்டிகளுக்கு பிறகு நீக்கிவிட்டு மற்றொருவரைச் சேர்க்கும்போது, அந்த புதிய வீரர் சரியாகச் செயல்படாவிட்டால் என்ன செய்வது? இது இரு வீரர்களையுமே பாதிக்கும். மற்ற வீரர்களும் தங்களுக்கும் இதுபோல நடக்கும் என்று பாதுகாப்பின்மையை உணர்வார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.

அதே உரையாடலில், அனுபவமிக்க இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் அஷ்வின் முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார். "ஐபிஎல் தொடரில் அவர் பந்துவீசிய விதத்திற்கும் சர்வதேச கிரிக்கெட்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருந்தது. அந்த அத்தியாயம் முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன்."

IND vs NZ: புவனேஸ்வர் குமார் மீண்டும் அணிக்கு வருவது எளிதல்ல.. ஷமிக்கு வாய்ப்பிருக்கு- அஸ்வின்

Also Read

IND vs NZ: புவனேஸ்வர் குமார் மீண்டும் அணிக்கு வருவது எளிதல்ல.. ஷமிக்கு வாய்ப்பிருக்கு- அஸ்வின்

"இனி அவர் மீண்டும் விளையாடுவது மிகவும் கடினம். இளைய வீரராக இருந்தால் 10 வாய்ப்புகள் கொடுத்து யோசிப்பார்கள். ஆனால் அனுபவமிக்க வீரராக கம்பேக் கொடுக்கும்போது பந்துவீச்சின் வேகம் மற்றும் வீரியம் மிக முக்கியம். ஐபிஎல் தொடருடன் ஒப்பிடும்போது இங்கு அவரது ஓட்டத்தின் வேகமும் பந்தின் வேகமும் குறைவாக இருந்தது. அதனால் தேர்வாளர்கள் நிச்சயம் யோசிப்பார்கள்" என்று அவர் கூறினார்.சமீபத்திய நான்கு போட்டிகளில் புவனேஷ்வர் குமார் 11.25 எகனாமி ரேட்டில் 180 ரன்களை விட்டுக்கொடுத்து, ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 2, 2026, 23:10 [IST]
Other articles published on Nov 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+