Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ: ரோகித் சர்மாவை விட இதை செய்ய கோலிக்கு தான் வாய்ப்பு அதிகம்.. புஜாரா கணிப்பு

ஹாமில்டன்: நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் களமிறங்குகின்றனர். கடைசியாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் விளையாடிய இவ்விரு வீரர்களும், தற்போது சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர்.

அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான ஆயத்தமாக இத்தொடர் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நியூசிலாந்தில் நடைபெறும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மாவை விட விராட் கோலி சதமடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் சேதேஷ்வர் புஜாரா தெரிவித்துள்ளார்.

Virat Kohli Rohit

"பவர் பிளேயில் அதிரடியான தொடக்கம் தருவதே ரோஹித்தின் பணி. ஆனால் நியூசிலாந்து ஆடுகள சூழலில் தொடக்க ஆட்டக்காரரின் பணி சற்று சவாலானது. அதேவேளையில், விராட் கோலி 3-ஆம் இடத்தில் களமிறங்கி இன்னிங்ஸை நிதானமாக நகர்த்தும் அணியின் நங்கூரமாக செயல்படுகிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3-வது இடத்தில் பேட்டிங் செய்பவருக்கு சதம் அடிப்பது சற்று எளிதானது. எனவே நியூசிலாந்து சூழலில் ரோஹித்தை விட கோலி சதம் அடிக்க அதிக வாய்ப்புள்ளது" என்று புஜாரா விளக்கமளித்துள்ளார்.

IPL 2027 தொடரில் களமிறங்க போகும் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்.. எப்படி தெரியுமா?

IPL 2027 தொடரில் களமிறங்க போகும் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர்.. எப்படி தெரியுமா?

நியூசிலாந்து மண்ணில் விராட் கோலியின் ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள் சிறப்பாக உள்ளன. அதேவேளையில் ரோஹித் சர்மா இதுவரை அங்கு ஒருநாள் போட்டிகளில் சதமடித்ததில்லை. நியூசிலாந்து மண்ணில் கோலி 13 இன்னிங்சில் 596 ரன்கள் அடித்துள்ளார். இதில் 1 சதம், 4 அரைசதம் அடங்கும். ரோகித் சர்மாவும் 13 இன்னிங்ஸ் விளையாடி 437 ரன்கள் அடித்துள்ளார். இதில் 4 அரைசதம் அடங்கும்.

தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறப்பான வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கம்பீரின் பயிற்சியின் கீழ் இதுவரை நடந்த 7 டெஸ்ட் தொடர்களில் இந்தியா 3 தொடர்களைக் கைப்பற்றியுள்ளது. இருப்பினும், சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒயிட்வாஷ் தோல்விகளையும் சந்தித்துள்ளது.

IND vs NZ ஒருநாள் தொடர் அட்டவணை விவரம்.. காலை எத்தனை மணிக்கு தொடக்கம்? எந்த சேனல், ஒடிடி? அணி விவரம்

Also Read

IND vs NZ ஒருநாள் தொடர் அட்டவணை விவரம்.. காலை எத்தனை மணிக்கு தொடக்கம்? எந்த சேனல், ஒடிடி? அணி விவரம்

எனவே, நியூசிலாந்திற்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடர் கௌதம் கம்பீருக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று புஜாரா சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என இரண்டு வகை கிரிக்கெட்டிலும் விளையாடும் சுப்மன் கில் மற்றும் கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வளித்து, டெஸ்ட்க்கு மட்டுமே முன்னுரிமை அளித்திருக்க வேண்டும் என்றும் புஜாரா சுட்டிக்காட்டியுள்ளார்.

Story first published: Monday, November 2, 2026, 16:33 [IST]
Other articles published on Nov 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+