Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs NZ- இவர் தான் இனி அடுத்த டெஸ்ட் கேப்டன்.. ரோகித் சர்மா சொன்ன காரணம்.. இளம் வீரருக்கு பாராட்டு

முல்தான் : நியூசிலாந்து எதிரான முதல் டெஸ்ட் போட்டி புதன்கிழமை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது நியூசிலாந்து தொடரில் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்பட்டது குறித்து ரோகித் சர்மா தன்னுடைய கண்ணோட்டத்தை கூறினார்.

இது குறித்து பேசிய அவர் ரோகித் சர்மா சர்வதேச அளவில் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார். நானும் அவருடன் ஆரம்ப காலத்தில் இருந்து பல கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறேன். ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்று நன்றாகவே தெரியும்.

ind vs nz rohit sharma jasprit bumrah cricket


போட்டியை பும்ரா நன்றாக கூர்ந்து கவனிப்பார். பும்ராவிடம் கிரிக்கெட் நுணுக்கங்கள் குறித்து ஏதேனும் பேசினால் அவர் நிச்சயம் புரிந்து கொள்வார். பும்ரா பெரிய அளவில் செயல்பட்டது கிடையாது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் அவர் இந்திய அணிக்கு தலைமை தாங்கி இருக்கிறார் என்று நினைக்கின்றேன்.

ஆட்டத்திற்கு என்ன தேவையோ அதை பும்ரா நன்கு புரிந்து கொள்வார். ஏதேனும் சூழலில் உங்களுக்கு ஏதேனும் ஆலோசனை தேவைப்பட்டால், பும்ரா நிச்சயம் நல்ல அறிவுரைகளை கூறுவார். கடந்த காலங்களிலும் கூட அணியில் அறிவுரை கூறும் நபர்களில் பும்ராவும் ஒருவராக இருந்திருக்கிறார். புதிதாக அணிக்குள் வந்திருக்கும் பவுலர்களுடன் பேசுவது, வீரர்களுக்குள் ஆலோசனை நடத்துவது என அனைத்திலும் சிறப்பாக செயல்படுவார் என்று ரோகித் சர்மா பாராட்டியுள்ளார்.

இதேபோன்று ஜெய்ஸ்வாலை திறமையான வீரர் என்று ரோகித் சர்மா பாராட்டு பேசியிருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடுகளம் எப்படி இருந்தாலும் எந்த கால சூழலுக்கும் ஏற்ப விளையாடக்கூடிய திறமை ஜெய்ஸ்வாலுக்கு இருக்கிறது. அவர் இந்தியாவுக்காக சில போட்டிகள் தான் விளையாடி இருக்கிறார். இதனால் அவர் குறித்து கணிப்பு சொல்வது கடினம். எனினும் ஒரு சிறந்த வீரருக்கு தேவையான அனைத்து குணங்களும் ஜெயிஸ்வாலிடம் இருக்கின்றது.

அடிமட்டத்திலிருந்து தற்போது இந்திய கிரிக்கெட்டில் உச்சத்திற்கு ஜெய்ஸ்வால் வந்திருக்கிறார். இதனால் தான் அவர் இந்திய அணியில் தொடர்ந்து விளையாடுகிறார். ஜெயிஷ்வாலுக்கு எப்போதுமே எவ்வளவு விளையாடினாலும் அது போதாது. மேலும் ரன் குவிக்க வேண்டும் என்று நினைப்பார் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 15, 2024, 17:53 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+