Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த விஷயம்.. பும்ராவை தேடி வந்த துணைக் கேப்டன் பதவி.. ராகுல், பண்ட் பக்கத்தில் கூட வர முடியாது!

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் வெளிநாடு தொடர்களில் அடிக்கடி சிக்கலை சந்திக்கும் ரோஹித் சர்மா காயமடைந்தால், பும்ராவின் தலைமையில் இந்திய அணி விளையாடும் என்பது உறுதியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கபில் தேவ்-க்கு எந்தவொரு பவுலரும் கேப்டன் பதவிக்கு வந்ததில்லை. சுனில் கவாஸ்கர், ஸ்ரீகாந்த், அசாரூதீன், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், தோனி, கவுதம் கம்பீர், விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரோஹித் சர்மா என்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே கேப்டன் பதவிக்கு கொண்டு வரப்பட்டனர்.

ind vs nz jasprit bumrah rohit sharma

சில தொடர்களில் மட்டும் அனில் கும்ப்ளே இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த வகையில் மீண்டும் பவுலர் ஒருவர் இந்திய அணியின் கேப்டன்சி ரேசில் முன்னிலையில் உள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக 2 போட்டிகளில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதனால் ரோஹித் சர்மா இல்லாத போது இந்திய அணியை வழிநடத்தக் கூடிய அடுத்த கேப்டனை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு பும்ராவுக்கு இருக்கிறது. அதேபோல் அவரிடம் அனுபவமும் அதிகளவில் இருக்க வேண்டிய தேவை உள்ளது.

விராட் கோலிக்கு பின் இந்திய அணியில் அதிக அனுபவம் கொண்ட வீரர்களாக அஸ்வின், ஜடேஜா, கேஎல் ராகுல் இருந்தாலும், வெளிநாடுகளில் ஜஸ்பிரித் பும்ராவின் அனுபவம் அலப்பறியது. அதேபோல் மன உறுதி மற்றும் திட்டங்களிலும் எதிரணியை எப்போதும் அசால்ட்டாக கையாளக் கூடிய வீரர் பும்ரா தான். பிட்சின் தன்மை, பவுலர்களுக்கான திட்டம், பவுலர்கள் மாற்றம், பேட்ஸ்மேன்களுக்கான சிக்கல் என்று அறிந்து வைத்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தாலும், பவுலர்களுக்கான கேப்டனாக பும்ரா தான் இருந்து வருகிறார். ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தியுள்ளார். கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோரும் அடுத்த கேப்டனுக்கான ரேசில் இருந்தாலும், பும்ரா அளவிற்கு ஆக்ரோஷமான வீரர்கள் கிடையாது.

அதுமட்டுமல்லாமல் கேஎல் ராகுல் எந்த நேரத்தில் ஃபார்மில் இருப்பார் என்று சொல்ல முடியாது. ஃபிட்னஸ் பிரச்சனையும் இருப்பதால், துணைக் கேப்டனாக பும்ராவை இந்திய அணி கொண்டு வந்துள்ளது. அதேபோல் இந்திய அணியின் முக்கியமான தொடர்களில் பும்ராவின் செயல்பாடுகள் உச்சத்தில் இருக்கும் என்பதால், மற்ற வீரர்களை விடவும் பும்ராவுக்கு பொறுப்பு அளித்ததே சரியான விஷயமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Saturday, October 12, 2024, 16:01 [IST]
Other articles published on Oct 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+