For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோஹித்தை சுத்து போட்ருவாங்க.. கவனமா இருக்கணும்.. பாக். திட்டத்தை புட்டு புட்டு வைத்த சச்சின்!

மான்செஸ்டர் : பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் என்ன திட்டத்தோடு வருவார்கள் என கணித்து கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

குறிப்பாக, இந்திய அணியின் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை சுற்றித் தான் அவர்களின் திட்டங்கள் இருக்கும் என்றும், அதற்கான காரணம் என்ன என்பதையும் கூறியுள்ளார் சச்சின்.

பெரும் எதிர்பார்ப்பு

பெரும் எதிர்பார்ப்பு

இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான் உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டியாக கருதப்படுகிறது. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும், முன்னாள் வீரர்கள் மத்தியிலும் கூட பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அவப்பெயர்

அவப்பெயர்

இதுவரை இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தியதில்லை என்ற அவப்பெயரை போக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்காக என்றே பல திட்டங்களை போட்டு வைத்துள்ளது.

சச்சின் யோசனை

சச்சின் யோசனை

ஆனால், இந்திய அணி மற்ற போட்டிகளைப் போலவே பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் தான் இந்திய அணிக்கு யோசனை கூறிய சச்சின், பாகிஸ்தான் அணியின் திட்டங்கள் இப்படித்தான் இருக்கும் என கூறியுள்ளார்.

முக்கிய குறி யார்?

முக்கிய குறி யார்?

தவான் இல்லாத நிலையில், ரோஹித் சர்மா, விராட் கோலி தான் பாகிஸ்தான் அணியின் முக்கிய குறியாக இருப்பார்கள். பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முஹம்மது ஆமிர் மற்றும் வஹாப் ரியாஸ், இவர்கள் இருவருக்கும் கடும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்றார்.

இந்தியாவின் திட்டம்

இந்தியாவின் திட்டம்

அதற்கு முக்கிய காரணம், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் நீண்ட இன்னிங்க்ஸ் ஆடுவார்கள். அவர்களை சுற்றி மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவார்கள். இந்த திட்டத்தை முறியடிக்கவே பாகிஸ்தான் அவர்கள் இருவரையும் குறி வைக்கும் என்கிறார்.

மிரளக் கூடாது

மிரளக் கூடாது

அதே போல, பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஆமிர் பந்துவீச்சை கண்டு மிரண்டு விடக் கூடாது என்றார். ஆமிர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக பந்துவீசி வருகிறார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டலாக பந்து வீசி 5 விக்கெட்கள் எடுத்தார்.

வார்னர் திணறல்

வார்னர் திணறல்

மேலும், அனுபவ வீரர் டேவிட் வார்னரே அவர் பந்தை சந்திக்க திணறினார். ஆமிர் பந்தில் ரன்களே எடுக்காமல் பொறுமை காத்தனர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள். அதை குறிப்பிட்ட சச்சின் இந்திய வீரர்களும் அதே போல, "டாட் பால்" ஆட வேண்டும் என்று நான் கூற மாட்டேன்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

இந்திய வீரர்கள் தங்கள் இயல்பான ஷாட்களை ஆமிர் ஓவர்களில் ஆடலாம். ஆனால், வித்தியாசமாக எதுவும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று கூறினார். சச்சின் சொன்னா சரியாத்தான் இருக்கும்!

Story first published: Friday, June 14, 2019, 12:55 [IST]
Other articles published on Jun 14, 2019
English summary
IND vs PAK Cricket World cup 2019 : Sachin Tendulkar explains Pakistan team’s plan for Rohit Sharma and Virat Kohli.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+