Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA -கோலியை வம்பிழுத்தாரா ரோகித்? பிரஸ் மீட்டில் இந்த வார்த்தையை கவனிச்சீங்களா? என்ன நடந்தது?

செஞ்சூரியன் : இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செவ்வாய் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ரோஹித் சர்மா,இந்திய அணி குறித்து பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

அப்போது கே எல் ராகுல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த ரோகித் சர்மா சொன்ன ஒரு விஷயம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.அதில் கே எல் ராகுல் இன்னும் எத்தனை நாட்கள் விக்கெட் கீப்பராக இருப்பார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

Ind vs SA 1st test - did Rohit sharma uses Indirect word on Virat kohli during presser

அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களது வாழ்க்கையில் பல மாற்றத்தை சந்தித்து வருவார்கள். தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் பல கட்டத்தில் அவர்கள் புதிய பொறுப்பை மேற்கொள்ள வேண்டிய சூழல் வரும். ஆனால் ஒரு சில வீரர்கள் மட்டும்தான் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் எந்த இடத்தில் விளையாடுகிறார்களோ அதே இடத்தில் தான் கடைசி வரை விளையாடுவார்கள் என்று கூறினார்.

இதுதான் தற்போது விராட் கோலி ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. கே எல் ராகுல் தொடர்பான கேள்விக்கு ஏன் ரோகித் சர்மா சம்பந்தமே இல்லாமல் இந்த பதிலை அளித்திருக்கிறார் என்று பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள். காரணம் ரோகித் சர்மா தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் முதலில் நடுவரிசை வீரராக தொடங்கி அதன் பிறகு தொடக்க வீரராக மாறினார்.

இதேபோல் ராகுல் சாதாரண வீரராக களத்தில் களமிறங்கி தற்போது விக்கெட் கீப்பர் வீரராகவும் மிடில் ஆடர் பேட்ஸ்மேன் ஆகவும் பொறுப்பை மாற்றி இருக்கிறார். ஆனால் விராட் கோலி மட்டும் தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் நம்பர் மூன்றாவது வீரராகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான்காவது வீரராகவும் விளையாடி வருகிறார்.

ரோகித் சர்மாவின் இந்த பேட்டிக்கு பின்னணியில் விராட் கோலிக்கு புதிய பொறுப்பை வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவெடுத்திருக்கும் என்றும் அதற்கு கோலி ஒப்புக் கொள்ளாமல் இருந்திருப்பார் என்றும் கூறுகிறார்கள். பேட்டிங் வரிசையில் புதிய இடத்தில் விளையாட மாட்டேன் என்று கோபத்தில் தான் இந்திய அணி விட்டு விராட் கோலி நான்கு நாட்கள் சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை வைத்து தான் ரோகித் சர்மா இவ்வாறு பேசி இருக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Story first published: Monday, December 25, 2023, 20:31 [IST]
Other articles published on Dec 25, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+