Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பவுலிங் பிட்சில் முதலில் இந்தியா பேட்டிங் வெற்றி கிடைக்குமா? கிரிக்கெட் வல்லுனர்கள் சொல்வது என்ன?

செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியா தற்போது பேட்டிங் செய்து வருகிறது. இது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் வெற்றி வாய்ப்பு குறித்து பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

செஞ்சூரியன் நகரில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆடுகளம் முற்றிலும் மூடப்பட்டிருந்தது. இதன் மூலம் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

Ind vs sa 1st test - Experts about winning chance for india in bowling wicket


மேலும் இன்றைய நாள் முழுவதும் மேகமூட்டத்துடன் தான் காணப்படும். இதனால் இந்த நெருக்கடியான சூழலில் இந்தியா முதலில் பேட்டிங் செய்வது எப்படி இருக்கும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இது குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர், இந்தியா இந்த டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்வது தான் நல்லது என்று நான் கருதுகிறேன்.

ஏனென்றால் இதுபோன்ற கடினமான சூழலில் எப்போதெல்லாம் இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறதோ அந்த டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது. நாம் முதலில் பந்து வீசுவதை விட முதலில் பேட்டிங் செய்தால் தான் நன்றாக செயல்படுகிறோம். இதனால் இது நல்ல விஷயம் தான் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய சஞ்சய் மஞ்சுரேக்கர் இந்தியா கடினமான சூழலில் பேட்டிங் செய்கிறது.

இதில் தைரியத்துடன் நின்று பேட்டிங் செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று குறிப்பிட்டார். இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த முறையும் இந்தியா இது போன்ற சூழலில் பேட்டிங் தான் செய்தது. அப்போது தென்னாபிரிக்கா வீரர்கள் ஒரு தவறு செய்தார்கள். பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் இருந்ததால் அவர்கள் பந்தை அங்கேயும் இங்கேயும் மாற்றி போட்டார்கள். அவர்கள் பந்துவீச்சில் ஒரு டிசிப்ளின் இல்லை. அதேபோல் ஒரு தவறை இங்கேயும் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இந்திய வீரர்கள் மோசமான பந்தை அடித்து ஆட வேண்டும். முதலில் தற்காத்துக் கொண்டு விளையாடுவது நல்லது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Story first published: Tuesday, December 26, 2023, 14:37 [IST]
Other articles published on Dec 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+