Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா மானம் போயிருக்கும்.. நல்லவேளை காப்பாற்றிய தென்னாப்பிரிக்கா.. கண்டத்திலிருந்து தப்பித்த கோலி

செஞ்சூரியன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இதனை அடுத்து விராட் கோலியும், ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இதில் ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்களிலும், விராட் கோலி 38 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி நூறு ரன்களைக் கடந்து விளையாடி வருகிறது. எனினும் இந்தப் போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் பீல்டிங்கில் இரண்டு மெகா தவறுகளை செய்தனர்.

Ind vs sa 1st test - south africa dropped two important catches saves india from humiliation

இதன் மூலம் இந்தியாவின் மானம் காப்பாற்றப்பட்டது. இல்லையென்றால் இந்திய அணி 50 ரன்கள் சேர்ப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருக்கும். கோலி, ஸ்ரேயாஸ் ஆட்டம் இழந்து இருந்தாலும் அவர்கள் நான்கு ரன்கள் எடுத்திருந்த போதே ஆட்டம் இழந்து இருப்பார்கள். ஆட்டத்தின் 12-வது புள்ளி நான்காவது ஓவரில் ரபாடா வீசிய பந்தை ஸ்ரேயாஸ் அடித்தார்.

அப்போது பாயிண்ட் திசையில் நின்று கொண்டிருந்த ஜான்சன் கையில் பந்து பட, அதனை பிடிக்க தவறவிட்டார் நல்ல உயரமான ஜான்சனுக்கு இது நல்ல கேட்ச் வாய்ப்பாகும். எனினும் பந்து பவுண்டரிக்கு சென்றது. இதை மட்டும் அவர் பிடித்திருந்தால் ஸ்ரேயாஸ் நான்கு ரன்களில் ஆட்டம் இழந்திருப்பார். இதேபோன்று விராட் கோலி நான்கு ரன்கள் எடுத்திருந்தபோது பர்கர் வீசிய பந்தை அடித்தார். அப்போது ஸ்கொயர் லெக்கிக் நின்று கொண்டிருந்த சோர்சி கேட்சை தவறிவிட்டார். இதன் மூலம் கோலிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

இந்த இரண்டு கேட்ச்களையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் பிடித்திருந்தால் இந்திய அணி அப்போதே ஐந்து விக்கெட்டுகளை இழந்திருக்கும். மதிய உணவு நேரத்திற்கு முன்பு வரை தென்னாப்பிரிக்கா பவுவலர்கள் இந்திய அணியின் மிடில் ஸ்டெம்ப் லைனில் வீசி ரன்களை கொடுத்தனர். ஆனால் தற்போது அதனை சரி செய்து வீசி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, December 26, 2023, 17:35 [IST]
Other articles published on Dec 26, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+