For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA-இந்த வீரரை இந்தியா மிஸ் செய்யும்.. பிரச்சினையை புள்ளி விவரத்துடன் புட்டு வைத்த கார்த்திக்

மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது. முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட இந்திய அணி 245 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்தது.

இதன் மூலம் 11 ரன்கள் முன்னிலை பெற்று தென்னாப்பிரிக்கா அணி உள்ளது. இந்திய அணி பந்துவீச்சு சிறப்பாக செயல்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ரசிகர்களுக்கு ஏமாற்றுமே மிஞ்சி இருக்கிறது. தென்னாப்பிரிக்க வீரர் டீன் எல்கார் 140 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்.

Ind vs SA - Dinesh Karthik says india will miss this star bowler

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக், இந்திய அணி இந்த போட்டியில் முஹம்மது சமியை ரொம்பவே மிஸ் செய்யும் என நினைக்கிறேன். அவரைப் போல திறமை வாய்ந்த வீரர் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தலைமை தாங்க கூடியவராக இருப்பார்கள். பும்ராவுக்கு ஒரு படை தளபதி போல் அவர் இருப்பார். இது போன்ற ஒரு ஆடுகளத்தில் இருவரும் பந்து வீசினால் நிச்சயமாக சில விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்கள்.

சர்துல் தாக்கூர், பிரசித் கிருஷ்ணாவும் 27 ஓவர்கள் வீசி 118 ரன்கள் வரை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் மறுபுறம் பும்ராவும் சிராஜும் 31 அவர்கள் வீசி 111 ரன்களை தான் கொடுத்து இருக்கிறார்கள். இதில் சிராஜ் கொஞ்சம் அதிக ரன்களை கொடுத்திருக்கிறார். இருவரும் பந்து வீசு வரும்போது நமக்கு விக்கெட்களும் அவ்வப்போது கிடைத்தது. ஆனால் சர்துல்,பிரசித் கிருஷ்ணா பந்து வீசும் போது பேட்ஸ்மேன் தவறு செய்வார்கள் என காத்திருந்தார்கள்.

ரோகித் சர்மாவை குறை சொல்வதில் நியாயம் கிடையாது. ஆனால் அவருடைய அணிக்கு நிச்சயம் இது நல்ல நாள் கிடையாது ஆட்டத்தின் இரண்டாவது பகுதியில் பிரசித் கிருஷ்ணா மற்றும் சர்துல் தாக்கூரை வைத்து ஓவர் வீசியது தவறாக இருந்திருக்கலாம். இதற்கு காரணம் பும்ராவும், சிராஜூம் அதிக நேரம் பந்து வீசி விட்டார்கள் என்பதால் ரோஹித் இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.

ஆனால் எல்காரின் பேட்டிங்கை பாருங்கள். அவர் பழைய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் போல் நவீன காலத்தில் விளையாடி வருகிறார். அவருடைய கிரிக்கெட் யுக்தியெல்லாம் சிம்பிளாக தான் இருக்கிறது. இந்த இன்னிங்ஸ்க்கு நாம் எல்காரை தான் பாராட்ட வேண்டும் என்றும் கார்த்திக் கூறியுள்ளார்.

Story first published: Thursday, December 28, 2023, 8:48 [IST]
Other articles published on Dec 28, 2023
English summary
Ind vs SA - Dinesh Karthik says india will miss this star bowler IND vs SA-இந்த வீரரை இந்தியா மிஸ் செய்யும்.. பிரச்சினையை புள்ளி விவரத்துடன் புட்டு வைத்த கார்த்திக்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+