கோலிக்கு வெறும் 153 ரன்கள் தான் தேவை.. சச்சினின் 18 ஆண்டுக்கால சாதனையை முறியடிக்க வாய்ப்பு
மும்பை : இந்தியா, இலங்கை அணிக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி இன்று கொழும்பு நகரில் தொடங்க உள்ளது. டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்பி இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒரு காலத்தில் அசுர பலத்துடன் இருந்த இலங்கை அணி தற்போது இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக வெறும் மூன்று போட்டிகளில் தான் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விராட் கோலி களமிறங்குவதால் சச்சினின் மிகப் பிரம்மாண்டமான உலக சாதனையை முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. விராட் கோலி அண்மையில் தான் உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக தன்னுடைய 50 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து சச்சினின் ஒரு நாள் கிரிக்கெட்டின் அதிக சதம் சாதனையை முறியடித்தார்.
இந்த நிலையில் 35 வயதான விராட் கோலி இன்னும் 152 ரன்கள் அடித்தால் சச்சின் பிரம்மாண்ட சாதனையை முறியடித்து விடலாம். அதாவது தற்போது விராட் கோலி 13 ஆயிரத்து 848 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடி அவர் 152 ரன்கள் சேர்த்தார். சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 14 ஆயிரம் ரன்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறுவார்.
அது மட்டுமல்லாமல் டென்டுல்கர் தன்னுடைய 350-வது இன்னிங்ஸில் தான் இந்த மைல்கல்லை கடந்த 2006 ஆம் ஆண்டு எட்டினார். சங்ககாரா 378 வது இன்னிங்ஸில் 2015 உலகக் கோப்பை தொடரில் இந்த மைல்ல்களை எட்டினார். ஆனால் விராட் கோலி தற்போது வெறும் 280 இன்னிங்ஸ் தான் விளையாடி இருக்கிறார். இதனால் இந்த 152 ரன்கள் எடுக்க, 70 இன்னிங்ஸ் கூட விராட் கோலி எடுத்துக்க முடியும். இதனால் எளிதாக 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக அடித்த வீரர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications