Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித் சர்மாவை திட்டம் போட்டு கவுத்துட்டார் கோலி.. டீமுக்குள் பெரிய பிரச்சனை இருக்கு!

Recommended Video

ரோஹித் ஷர்மா அணியில் இல்லை..கொந்தளித்த ரசிகர்கள் | Ind Vs WI Test | Rohit Sharma

ஆன்டிகுவா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா இடம் பெறாததை எதிர்த்து ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா - ரஹானே இருவரில் ஒருவருக்குத் தான் அணியில் இடம் கிடைக்கும் என கூறப்பட்டது.

ரோஹித் சர்மா நீக்கம்

ரோஹித் சர்மா நீக்கம்

இந்த நிலையில் ரோஹித் சர்மாவை அணியில் சேர்க்காமல், துணை கேப்டனாக இருக்கும் ரஹானேவை அணியில் ஆட வைத்தார் கேப்டன் கோலி. ரஹானே நல்ல வீரர் என்றாலும், முதல் டெஸ்டில் அரைசதம் அடித்து விட்டாலும், ரோஹித்தை ஏன் அணியில் சேர்க்கவில்லை என கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

பயிற்சிப் போட்டியில் அரைசதம்

பயிற்சிப் போட்டியில் அரைசதம்

டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ரோஹித் அரைசதம் அடித்து இருந்தார். அப்போது ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் உறுதி என பேச்சு கிளம்பியது. ஆனால், டாஸ் போடப்பட்ட பின் அணி அறிவிக்கப்பட்ட போது அதில் ரோஹித் சர்மா இடம் பெறவில்லை.

ரசிகர்கள் கொதிப்பு

ரசிகர்கள் கொதிப்பு

ரோஹித் சர்மா ரசிகர்கள் மற்றும் பொதுவான ரசிகர்கள் பலர் இந்த முடிவை எதிர்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் கோலி - ரோஹித் இடையே உள்ள விரிசல் இருப்பதாக வரும் தகவல்களை சுட்டிக் காட்டி அது தான் காரணம் என கூறி வருகின்றனர். ரோஹித்துக்கு ஆதரவாக வெளியாகி உள்ள பதிவுகளில் சில -

சராசரி அதிகமாக உள்ளது

ரோஹித் சர்மா இதுவரை 47 டெஸ்ட் இன்னிங்க்ஸ் ஆடி உள்ளார். அதே அளவு டெஸ்ட் போட்டிகளில் ஆடிய மற்ற இந்திய வீரர்களின் சராசரியை ஒப்பிட்டு கூறி இருக்கிறார். ராகுலை விட ரோஹித் சர்மாவின் டெஸ்ட் சராசரி அதிகமாக உள்ளது என கூறி இருக்கிறார்.

முற்றிலும் திட்டமிட்டது

நான் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் தீவிர ரசிகன். ஆனால். இன்று கோலி செய்தது முற்றிலும் திட்டமிட்டது. ரோஹித் சர்மா போன்ற வீரரை அணிக்கு வெளியே அமர வைக்கக் கூடாது.

ஏதும் பிரச்சனை உள்ளதா?

விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரிக்கு, ரோஹித் சர்மா மற்றும் அவரது கிரிக்கெட் வாழ்வு மீது ஏதும் பிரச்சனை உள்ளதா? என சந்தேகம் கிளப்பி இருக்கிறார் இந்த ரசிகர்!

சிறப்பான ரெக்கார்டு

கோலி எடுத்த முட்டாள்தனமான முடிவு இது. ரோஹித், அஸ்வின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சிறப்பான ரெக்கார்டு வைத்துள்ளார்கள். அணிக்குள் பெரிதாக ஏதோ பிரச்சனை உள்ளது என கூறி உள்ளார்.

நல்ல பார்ம்

ரோஹித் சர்மா இப்போது நல்ல பார்மில் இருக்கும் நிலையில் அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை என கேட்டு இருக்கிறார். வெளியில் அமர வைக்கப்பட்ட வீரர்களின் பலம் ஆடுபவர்களை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Friday, August 23, 2019, 10:32 [IST]
Other articles published on Aug 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+