Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாய்ப்பே இல்லாமல் அல்லாடிய ஜடேஜா.. இன்னைக்கு மக்கள் ஹீரோ.. அந்த 2 மேட்ச் பற்றி சொன்ன கங்குலி!

Recommended Video

Super Man Jadeja : நேற்றைய ஜடேஜாவின் அதிரடிக்கு இப்படி ஒரு பின் கதையா?- வீடியோ

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் செயல்பாடு குறித்து கட்டுரை எழுதிய கங்குலி, ஜடேஜாவை புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்று, இரண்டாம் டெஸ்ட்டை எதிர் நோக்கி உள்ளது. ஜடேஜா முதல் டெஸ்டில் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.

சுட்டிக் காட்டிய கங்குலி

சுட்டிக் காட்டிய கங்குலி

இந்த நிலையில் தான் அவரது சமீப கால ஆட்டத்தை பாராட்டி இருக்கிறார் கங்குலி. ஜடேஜா கிடைத்த வாய்ப்பில் எப்படி சாதித்தார் என உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் போட்டி என இரண்டு போட்டிகளை சுட்டிக் காட்டி அவரது நம்பிக்கையை பற்றி பாராட்டிப் பேசி இருக்கிறார்.

தவித்த ஜடேஜா

தவித்த ஜடேஜா

கடந்த ஆண்டுகளில் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் ஜடேஜா தன் இடத்தை காரணமே இல்லாமல் இழந்தார். கிட்டத்தட்ட ஜடேஜாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்வு முடிந்தது என பலரும் எண்ணினர்.

பெஞ்ச்சில் அமர்ந்தார்

பெஞ்ச்சில் அமர்ந்தார்

இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளில் ரன் குவித்து, விக்கெட் சரித்தார். இந்திய அணியில் அவரை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதை ஏற்படுத்தினார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், அணியில் இருந்தாலும், போட்டிகளில் ஆடும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கவில்லை. பாதி நாள் பெஞ்ச்சில் அமர்ந்து இருக்க வேண்டிய நிலை.

உலகக்கோப்பை வாய்ப்பு

உலகக்கோப்பை வாய்ப்பு

கிடைத்த போட்டிகளில் எல்லாம் பந்துவீச்சு அல்லது பேட்டிங்கில் தன்னை நிலை நாட்ட முயன்று வந்தார். இந்த நிலையில், உலகக்கோப்பை தொடரில் முக்கால்வாசி போட்டிகளை பெஞ்ச்சில் கழித்த பின் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அரையிறுதி ஆட்டம்

அரையிறுதி ஆட்டம்

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து மோசமாக தோற்கப் போகிறது என அனைவரும் எண்ணிய போது, நங்கூரமாக நின்று ரன் குவித்தார். 77 ரன்கள் எடுத்து இரண்டு ஓவர்கள் மீதம் இருந்த போது ஆட்டமிழந்தார். அன்று இந்தியா தோற்றாலும், ஜடேஜா புகழின் உச்சியை எட்டினார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்

உலகக்கோப்பைக்கு பின் மறுக்க முடியாத வீரராக மாறிய ஜடேஜா, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் மீண்டும் உலகக்கோப்பை போன்ற ஒரு சூழ்நிலையில், இந்திய அணி 189 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தவித்த போது, பின் வரிசை வீரர்களுடன் நின்று 58 ரன்கள் குவித்தார். அணி கூடுதலாக 100 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தார்.

அஸ்வினுடன் மல்லுக்கட்டு

அஸ்வினுடன் மல்லுக்கட்டு

இந்த டெஸ்ட் போட்டியில் கூட அஸ்வின், குல்தீப் யாதவ் என இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலையில் தான் இருந்தார் ஜடேஜா. உலகக்கோப்பை தாக்கம் தான் அவருக்கு அணியில் வாய்ப்பை கொடுத்தது.

கங்குலி பாராட்டு

கங்குலி பாராட்டு

இப்படி தனக்கு கிடைத்த குறைந்த வாய்ப்புகளில் அணிக்கு அவசியமான நேரங்களில், உலகக்கோப்பை அரையிறுதி, வெ.இண்டீஸ் டெஸ்ட் போட்டி என இரண்டு முறை ஜொலித்த ஜடேஜாவை குறிப்பிட்டு பாராட்டி இருக்கிறார் கங்குலி.

நம்பிக்கை இழக்கவில்லை

நம்பிக்கை இழக்கவில்லை

ஜடேஜா ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெறாத போதும் நம்பிக்கை இழக்கவில்லை. அவர் உலகக்கோப்பையில் பயங்கரமான ஆட்டம் ஆடினார். அதன் பின் முதல் டெஸ்டிலும் அசத்தினார். இந்தியாவுக்கு எப்போது தேவையோ அப்போது அவர் வேண்டியதை அளித்தார் என்று குறிப்பிட்டு இருந்தார் கங்குலி.

Story first published: Thursday, August 29, 2019, 20:18 [IST]
Other articles published on Aug 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+