For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் இல்லை? ஆப்பு வைக்க வரும் 2 பேர்.. குழப்பத்தில் கோலி!

கூலிட்ஜ் : ரோஹித் சர்மாவுக்கு முதல் டெஸ்ட் போட்டியில் அணியில் இடம் கிடைப்பது கடினம். அதற்கு காரணம், ரஹானே மற்றும் ஹனுமா விஹாரி தான் என விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் முடிவடைந்து டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது.

டெஸ்ட் தொடரில் இந்திய பேட்டிங் வரிசையில் யார், யாரை எடுப்பது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கேப்டன் கோலி குறிப்பிட்ட மூன்று பேட்ஸ்மேன்களில் இருவரை தான் தேர்வு செய்ய முடியும் என்ற நிலையில் இருக்கிறார்.

போராடும் ரோஹித் சர்மா

போராடும் ரோஹித் சர்மா

அந்த மூவரில் முதல் பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா. ரோஹித் சர்மா பல ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடி வருகிறார். ஆறு ஆண்டுகளில் 27 டெஸ்ட் போட்டிகளில் தான் ஆடி உள்ளார்.

வாய்ப்பு இல்லை

வாய்ப்பு இல்லை

ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் ரோஹித், டெஸ்ட் அரங்கில் இன்னும் தன் முத்திரையை பதிக்கவில்லை. அதற்கான, நீண்ட வாய்ப்புகளும் அவருக்கு வழங்கப்படவில்லை.

ரோஹித் பார்ம்

ரோஹித் பார்ம்

இந்த நிலையில், டெஸ்ட் தொடருக்கு முன் நடந்த பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மா அரைசதம் அடித்து அசத்தினார். ஒருநாள் போட்டிகளிலும் நல்ல பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, அதே பார்மை டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்வேன் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார்.

ரஹானே சராசரி

ரஹானே சராசரி

ரஹானே சராசரியாக ஆடி வருகிறார். ஐபிஎல் தொடருக்குப் பின் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் விளையாடிய அவர் ஏழு கவுன்டி டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார். மூன்று டக் அவுட்கள் மற்றும் நான்கு ஒற்றை இலக்க ரன்கள் அடித்து கவலை அளித்தார். எனினும், பயிற்சிப் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் ஒரு அரைசதம் அடித்து தன் இடத்தைக் காப்பாற்றிக் கொண்டுள்ளார்.

ஹனுமா விஹாரி

ஹனுமா விஹாரி

ரோஹித் சர்மா - ரஹானே இருவருக்கும் போட்டியாக இருப்பது ஹனுமா விஹாரி. பகுதி நேர சுழற் பந்துவீச்சாளராக செயல்படக் கூடிய இவர், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான முதல் தர டெஸ்ட் போட்டியில் ஒரு சதம், ஒரு அரைசதம், பயிற்சிப் போட்டியில் ஒரு அரைசதம் அடித்துள்ளார்.

பேட்டிங் வரிசை

பேட்டிங் வரிசை

இவர்கள் மூவருக்கும் டெஸ்ட் அணி பேட்டிங் வரிசையில் இடம் தர முடியாது. துவக்க வீரர்களாக ராகுல், மாயங்க் அகர்வால், அடுத்து புஜாரா, கோலி களமிறங்குவர். இவர்கள் நால்வர் தவிர, விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் நான்கு பந்துவீச்சாளர்கள் அணியில் இடம் பெற வேண்டும்.

ரஹானே - ரோஹித் மோதல்

ரஹானே - ரோஹித் மோதல்

மீதமிருக்கும் இரண்டு மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசைக்கு ரோஹித் சர்மா, ஹனுமா விஹாரி, ரஹானே போட்டி போட்டு வருகின்றனர். நான்கு பந்துவீச்சாளர்கள் மட்டுமே ஆடும் பட்சத்தில் நிச்சயம் ஒரு பகுதி நேர பந்துவீச்சாளர் அணியில் இடம் பெற வேண்டும். அந்த இடத்திற்கு ஹனுமா விஹாரி வந்து விடுவார். ரோஹித் - ரஹானே இடையே தான் இப்போது போட்டி.

வெ.இண்டீஸ் பிட்ச்

வெ.இண்டீஸ் பிட்ச்

வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ரோஹித் சர்மா தான் தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள். அவர் வேகப் பந்துவீச்சை சமாளித்து ஆடக் கூடியவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. கேப்டன் கோலி ரோஹித் சர்மாவை நீக்குவாரா? அல்லது ரஹானேவை நீக்குவாரா?

Story first published: Wednesday, August 21, 2019, 11:38 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
IND vs WI 2019 : India may drop Rohit Sharma in first test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X