Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: விட்டு விட்டு பெய்த மழை.. சேதமடைந்த அவுட் பீல்டு.. முதல் ஒருநாள் போட்டி ரத்து!

பிராவிடன்ஸ்: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்தப் போட்டிக்கு முன் மழை பெய்ததால் போட்டி சுமார் 2 மணி நேரம் தாமதமாக துவங்கியது. அதனால் டாஸ் போடுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

பின்னர் போட்டி துவங்கி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் ஆடி வந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டது. அதனால், போட்டி 5.4 ஓவர்களோடு நிறுத்து வைக்கப்பட்டது. 34 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு, மீண்டும் போட்டி தொடங்கியது. அப்போது 13வது ஓவரின் முடிவில் மீண்டும் மழை பெய்ததால் போட்டி மீண்டும் நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வந்தது. இதன் இடையே அவுட் பீல்டு மோசமாக சேதமடைந்தது. அதை சீரமைக்க அதிக நேரம் ஆனது. அதனால், 20 ஓவர் போட்டிகளாக கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, போட்டியை கைவிடுவதாக அறிவித்தனர் அம்பயர்கள்.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

முன்னதாக மழையால் ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தது. அதனால், முதலில் பந்து வீசும் அணிக்கு பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சாதகமான சூழ்நிலை நிலவும். டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதே போல, இந்திய அணியின் கேப்டன் கோலி டாஸ் வென்றவுடன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அணியில் ட்விஸ்ட்

அணியில் ட்விஸ்ட்

முதல் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியில் ராகுல் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு அணியில் இடம் அளிக்கவில்லை. அதே போல, சாஹல், நவ்தீப் சைனி இடம் பெறுவர் என போட்டிக்கு முன்பு கூறப்பட்டது. அவர்களுக்கும் அணியில் இடம் அளிக்கவில்லை.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இந்திய அணி - ரோஹித் சர்மா, தவான், கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அஹ்மது

வெ.இண்டீஸ் அணி விவரம்

வெ.இண்டீஸ் அணி விவரம்

வெ.இண்டீஸ் அணி - ஈவின் லீவிஸ், கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், ஷிம்ரான் ஹெட்மயர், ராஸ்டன் சேஸ், ஜேசன் ஹோல்டர், கார்லோஸ் பிராத்வைட், பாபியன் ஆலன், ஷெல்டன் காட்ரல், கீமர் ரோச்

Story first published: Friday, August 9, 2019, 1:22 [IST]
Other articles published on Aug 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+