Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் அன்புத் தம்பிக்கு இது தான் கடைசி சான்ஸ்.. ஒழுங்கா ஆடலைனா ஆப்பு தான்!

Recommended Video

IND VS WI TEST 2019 | ராகுலுக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு!- வீடியோ

ஆன்டிகுவா : இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று, துவக்க வீரராக ஆடி வரும் கே எல் ராகுல், அடுத்த டெஸ்ட் போட்டியில் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் அணியில் தன் இடத்தை இழக்க நேரிடும்.

இந்திய அணியில் 2018ஆம் ஆண்டு முழுவதும் மோசமான பார்ம் அவுட்டில் இருந்தார் ராகுல். இருந்தாலும், அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தார்.

அப்போதே அவர் கேப்டன் கோலியின் நட்பு வட்டத்தில் இருக்கிறார். அதனால் தான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கிறது என கூறப்பட்டது.

ராகுல் நிலை

ராகுல் நிலை

இந்த ஆண்டு ஓரளவு நன்றாக ஆடினாலும், டெஸ்ட் அணியில் இருக்கும் போட்டி காரணமாகவும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பரிசோதனை முயற்சிகள் எடுக்க முடியாது என்பதாலும், டெஸ்ட் அணியில் பெரிய அளவில் ரன்கள் குவித்து தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் ராகுல்.

டெஸ்ட் பார்ம்

டெஸ்ட் பார்ம்

ராகுல் டெஸ்ட் போட்டிகளில் மோசமான பார்மில் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் 10 இன்னிங்க்ஸ்களில் அவர் எடுத்த ரன்கள் - 9, 0, 2, 44, 2, 33*, 4, 0 மட்டுமே. அதனால், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் இரு போட்டிகள் அவருக்கு முக்கியமான வாய்ப்பாக இருந்தது.

முதல் டெஸ்ட் சொதப்பல்

முதல் டெஸ்ட் சொதப்பல்

முதல் டெஸ்டில் ஓரளவு ரன்கள் எடுத்தார் ராகுல். முதல் டெஸ்டின் முதல் இன்னிங்க்ஸில் 44 ரன்களும், இரண்டாம் இன்னிங்க்ஸில் 38 ரன்களும் எடுத்தார். இது சராசரியான ரன்கள் தான். ஆனால், அவரது பலவீனமாக கருதப்படும் ஒரு தவறை மீண்டும் செய்தார்.

என்ன சிக்கல்?

என்ன சிக்கல்?

இந்த ஆண்டு ஆடிய போட்டிகளில் நன்றாக துவக்கம் பெறும் ராகுல், பெரிய ரன்கள் அடிக்கும் முன் தேவையில்லாத ஷாட் ஆடி விக்கெட்டை பறி கொடுக்கிறார். முதல் டெஸ்டிலும் 44. 38 ரன்கள் எடுத்தார். அதை பெரிய அளவில் எடுத்துச் செல்லவில்லை.

முன்பே கூறிய கோலி

முன்பே கூறிய கோலி

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் துவங்கும் முன்பே கோலி இந்திய துவக்க வீரர்களை எச்சரித்து பேசி இருந்தார். அவர்களுக்கு இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் நான்கு இன்னிங்க்ஸ்கள் நாங்கள் வாய்ப்பு கொடுத்து இருக்கிறோம் என கூறி, அவர்கள் நிரூபிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்து இருந்தார்.

மாயங்க் நிலை என்ன?

மாயங்க் நிலை என்ன?

ராகுல் தவிர மற்ற துவக்க வீரரான மாயங்க் அகர்வாலும் லேசாக சிக்கலில் தான் இருக்கிறார். அவர் முதல் டெஸ்டில் 5 மற்றும் 16 ரன்கள் தான் எடுத்தார். எனினும், அவர் மொத்தமாக ஆடி உள்ள ஐந்து டெஸ்ட் இன்னிங்க்ஸ்களில் இந்த இரண்டு மட்டுமே மோசம். மற்ற மூன்றில் நல்ல ரன்கள் எடுத்துள்ளார்.

அடுத்த டெஸ்ட் முக்கியம்

அடுத்த டெஸ்ட் முக்கியம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தான் கோலியின் அன்புத் தம்பி ராகுலுக்கு கடைசி வாய்ப்பு. அந்தப் போட்டியில் அவர் ஒரு அரைசதமாவது அடிக்கவில்லை என்றால் டெஸ்ட் அணியில் இடத்தை இழக்க நேரிடும்.

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்

இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் இந்தியாவில் நடைபெறும் நிலையில், வாய்ப்புக்கு பல வீரர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ரோஹித் சர்மா காத்திருப்பு

ரோஹித் சர்மா காத்திருப்பு

முக்கியமாக ரோஹித் சர்மா நல்ல பார்மில் இருந்தாலும், அணியின் இடம் இல்லாமல் டெஸ்ட் தொடரில் பெஞ்சில் அமர்ந்து இருக்கிறார். அவரை அணியில் சேர்க்க கோலிக்கு அழுத்தம் இருக்கிறது.

ப்ரித்வி ஷா வருவார்

ப்ரித்வி ஷா வருவார்

அதே போல, நவம்பர் மாதம் ப்ரித்வி ஷா தடையில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவார். அப்போது அவர் நல்ல பார்மில் இருந்தால், அவருக்கும் அணியில் இடம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். ராகுல் சிக்கலான நிலையில் தான் இருக்கிறார்.

Story first published: Thursday, August 29, 2019, 12:16 [IST]
Other articles published on Aug 29, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+