Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பெருசா ஆப்பு வைச்ச கேப்டன் கோலி.. அஸ்வின், ரோஹித் சர்மாவுக்கு பெஞ்ச்சில் தாராள இடம்.. ரசிகர்கள் ஷாக்

Recommended Video

பல வீரர்கள் டீம்மில் இல்லை.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த கோலி- வீடியோ

ஆன்டிகுவா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முக்கிய வீரர்களுக்கு அணியில் இடம் மறுத்து அதிர விட்டுள்ளார் கேப்டன் கோலி.

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமான இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி எந்த வீரர்களைக் களமிறக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் அணியில் ரோஹித் சர்மா, அஸ்வின், குல்தீப் என பலரும் எதிர்பார்த்த வீரர்களுக்கு இடம் மறுத்து இருக்கிறார் கேப்டன் கோலி. இதைக் கண்டு இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அணித் தேர்வில் குழப்பம்

அணித் தேர்வில் குழப்பம்

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் யாரை தேர்வு செய்வார்கள் என்பதில் குழப்பம் நீடித்தது. குறிப்பாக குல்தீப் யாதவ் - அஸ்வின் இருவரில் யார் அணியின் முன்னணி ஸ்பின்னர் என்ற விவாதம் எழுந்தது, இவர்களில் யாருக்கு இடம் கிடைக்கும் என்ற பேச்சு இருந்தது. அதே போல, ரோஹித் - ரஹானே இருவரில் ஒருவர் தான் அணியில் இடம் பிடிப்பார் என்ற நிலை இருந்தது.

அஸ்வின், குல்தீப் இருவரும் இல்லை

அஸ்வின், குல்தீப் இருவரும் இல்லை

ஆனால், டாஸ் போடப்பட்ட பின் அணியை அறிவித்த கோலி, அஸ்வின், குல்தீப் இருவரும் இல்லை. ஒரே ஒரு ஸ்பின்னராக ஜடேஜா தான் அணியில் ஆடுகிறார் என்றார். இது யாரும் எதிர்பாராத திருப்பமாக இருந்தது.

ரோஹித் பரிதாபம்

ரோஹித் பரிதாபம்

அதே போல, ரஹானே கவுன்டி போட்டிகளில் சரியாக ஆடாத நிலையிலும் அவருக்கு அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் போட்டிகளில் சரியாக வாய்ப்பு கிடைக்காத ரோஹித் சர்மா மீண்டும் அணியில் தன் இடத்திற்காக அல்லாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

முதல் டெஸ்டில் ஆடும் இந்திய அணி விவரம் - மாயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, பும்ரா

டாஸ் தோல்வி

டாஸ் தோல்வி

இந்தப் போட்டியில் இந்தியா டாஸில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் டாஸில் வெற்றி பெற்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் மழை பெய்து பந்துவீச்சுக்கு சாதகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 22, 2019, 20:05 [IST]
Other articles published on Aug 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+