For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அஸ்வின், ரோஹித் சர்மாவுக்கு 2வது டெஸ்டில் இடம் உண்டா? ஒரே வரியில் பதில் சொன்ன கேப்டன் கோலி!

கிங்க்ஸ்டன் : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் அஸ்வின், ரோஹித் சர்மாவுக்கு அணியில் இடம் உண்டா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

போட்டிக்கு முன் டாஸ் போடும் போது கேப்டன் கோலி அணியை அறிவிக்கும் போது ரோஹித், அஸ்வின் பெயர் இருக்குமா? என்ன சொல்லப் போகிறார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால், கேப்டன் கோலி ஒரே வரியில் பதில் சொல்லி விட்டு சென்றுவிட்டார்.

டாஸ் முடிவு என்ன?

டாஸ் முடிவு என்ன?

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி ஆசைப்பட்டது போலவே முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

கோலி பேச்சு

கோலி பேச்சு

அதிக வெப்பம் இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஏன் பந்துவீச்சை தேர்வு செய்தது என்பதே புரியவில்லை. அதன் பின் கேப்டன் கோலி இந்திய அணியின் திட்டம் பற்றி பேசினார்.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

கேப்டன் விராட் கோலி பேசும் போது இந்திய அணியில் யார் ஆடுகிறார்கள் என்பது பற்றி ஒரே வரி தான் சொன்னார். "கடைசி போட்டியில் ஆடிய அதே அணி தான் ஆடுகிறோம்" என்று கூறி விட்டார்.

காரணமே இல்லை

காரணமே இல்லை

அஸ்வின், ரோஹித் சர்மா அணியில் இல்லை என்று குறிப்பிட்டு கூட கூறவில்லை. முதல் போட்டியில் வெற்றி பெற்றதால், கடந்த போட்டியில் ஆடிய அதே வீரர்கள் இடம் பெற்றனர் என்பதை தவிர வேறு எந்த காரணமும் கூறவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.

ஏன் இந்த முடிவு?

ஏன் இந்த முடிவு?

அஸ்வினுக்கு பதிலாக இடம் பெற்ற ஜடேஜா, ரோஹித் சர்மாவுக்கு இடம் கிடைக்காமல் போக காரணமாக இருக்கும் ரஹானே, ஹனுமா விஹாரி ஆகியோர் முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடினர்.

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

என்ன இருந்தாலும், ரோஹித் சர்மா, அஸ்வினுக்கு அணியில் இடம் மறுத்தது தவறு தான் என ஒரு சில ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். சிலர் உத்தேச அணியில் எடுத்து விட்டு ரோஹித் சர்மாவை வெளியில் உட்கார வைப்பது அவமானப்படுத்துவது என பொங்கி வருகின்றனர்.

இனி வாய்ப்பு கிடைக்குமா?

இனி வாய்ப்பு கிடைக்குமா?

இனியும் இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடிய ஜடேஜா, ரஹானே, ஹனுமா விஹாரி மீண்டும் அடுத்த டெஸ்ட் தொடரிலும் இடம் பெறுவர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

அடுத்த தொடர்

அடுத்த தொடர்

இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்து விளையாட உள்ளது. அந்த தொடருக்கான அணி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும். அப்போது அஸ்வின், ரோஹித் சர்மா நிலை என்ன என்று பார்க்கலாம்.

Story first published: Friday, August 30, 2019, 22:52 [IST]
Other articles published on Aug 30, 2019
English summary
IND vs WI 2019 : Kohli not gave chance to Ashwin and Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+