Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டீம்ல இடம்லாம் கிடையாது.. பெஞ்சுல வேணா உட்கார்ந்துக்கலாம்.. துணை கேப்டன் பதவிக்கும் ஆப்பு இருக்கு!

கூலிட்ஜ் : ரஹானே படு மோசமான பார்மில் இருக்கிறார். பயிற்சிப் போட்டியிலும் வந்த உடன் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடருக்கு முன் இரு அணி வீரர்களும் பயிற்சிப் போட்டியில் பங்கேற்றனர்.

இந்தியா ஏ - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதிய பயிற்சிப் போட்டியில் சமீப காலமாக பார்ம் அவுட்டில் இருக்கும் ரஹானே மோசமாக சொதப்பினார்.

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளி

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. கடந்த டிசம்பர் - ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதன் பின் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிகுதிறன டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆட உள்ளது.

டெஸ்ட் வீரர்கள் பயிற்சி

டெஸ்ட் வீரர்கள் பயிற்சி

நீண்ட காலத்திற்குப் பின் டெஸ்ட் போட்டியில் ஆடுவதால் டெஸ்ட் அணியில் மட்டும் ஆடும் வீரர்கள் அனைவரும் பயிற்சிப் போட்டியில் பங்கேற்றனர். இதில் ஓரளவாவது தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.

ரஹானே சொதப்பல்

ரஹானே சொதப்பல்

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான போட்டியில் ரஹானே வெறும் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். வெறும் 6 பந்துகளை மட்டுமே சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெறும் ஒரு இன்னிங்க்ஸ் மோசமாக ஆடினால் ஒருவருக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகுமா?

கவுன்டி பார்ம்

கவுன்டி பார்ம்

நிச்சயம் கிடையாது. ரஹானே இந்த பயிற்சிப் போட்டியில் மட்டும் மோசமாக ஆடவில்லை. ஐபிஎல் தொடருக்குப் பின் இங்கிலாந்து கவுன்டி போட்டிகளில் பங்கேற்றார். அந்த தொடரில் 14 இன்னிங்க்ஸ் ஆடிய அவர் ஒரு சதம், இரண்டு அரைசதம் மட்டுமே அடித்தார்.

மீண்டும் 1 ரன்

மீண்டும் 1 ரன்

கவுன்டி போட்டிகளில் இரண்டு முறை 1 ரன்னிலும், மூன்று முறை டக் அவுட் ஆகியும் ஆட்டமிழந்தார் ரஹானே. அந்த தொடரில் மிகவும் மோசமான பார்மில் இருந்தார். அதைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இடம் சந்தேகம்

இடம் சந்தேகம்

இந்த மோசமான பார்ம் காரணமாக ரஹானேவுக்கு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே தோன்றுகிறது. பரிசோதனை முயற்சியாக ஒரு போட்டியில் அவருக்கு இடம் கிடைப்பதும் கடினம் தான். அதற்கு முக்கிய காரணம், இனி வரும் டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம் என்பது தான்.

துணை கேப்டன் பதவிக்கும் ஆப்பு

துணை கேப்டன் பதவிக்கும் ஆப்பு

டெஸ்ட் அணியில் துணை கேப்டனாக இருக்கிறார் ரஹானே. அணியில் இடம் இல்லை என்றால் அந்த பதவிக்கும் ஆபத்து தான். ரஹானே டெஸ்ட் அணியில் இடம் பெறவில்லை என்றால் புஜாரா அல்லது ரோஹித் சர்மா துணை கேப்டன் பதவியைப் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

புஜாரா அசத்தல்

புஜாரா அசத்தல்

இதே பயிற்சிப் போட்டியில் புஜாரா சதம் அடித்தார் 187 பந்துகளில் சதம் அடித்த அவர், மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் அவுட் ஆகாமல் வெளியேறினார். மயங்க் அகர்வால் 12, ராகுல் 36, பண்ட் 33 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

ரோஹித்துக்கு வாய்ப்பு

ரோஹித்துக்கு வாய்ப்பு

டெஸ்ட் போட்டிகளில் இன்னும் தன் இடத்தை உறுதி செய்யாத ரோஹித் அசத்தினார். ரோஹித் சர்மா 68 ரன்கள் அடித்து கலக்கினார். அதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் தன் இடத்தை உறுதி செய்துள்ளார்.

Story first published: Sunday, August 18, 2019, 10:54 [IST]
Other articles published on Aug 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+