Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் 20.. இவர் 21.. டி20யில் அந்த சாதனைக்காக மல்லுக்கட்டும் ரோஹித் - கோலி.. ஜெயிச்சது யார் தெரியுமா?

Recommended Video

Rohit beat kohli : கோலியை பின்தள்ளி ரோஹித் சர்மா புதிய சாதனை- வீடியோ

ப்ளோரிடா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன போட்டியில் ரோஹித் சர்மா, விராட் கோலியை முந்தி டி20 சாதனை ஒன்றை செய்தார்.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உலகக்கோப்பை தொடருக்குப் பின் சந்திக்கும் டி20 தொடரின் இரண்டாம் போட்டியில் ரோஹித் சர்மா சிறப்பாக பேட்டிங் செய்தார்.

டி20யில் எப்போதுமே கலக்கும் ரோஹித் இந்தப் போட்டியில் இரண்டு முக்கிய சாதனைகளை செய்தார். அதில் ஒன்றில் தான் கோலியை வீழ்த்தி இருக்கிறார்.

ரோஹித் கோலி போட்டி

ரோஹித் கோலி போட்டி

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு முன் ரோஹித் சர்மா - கோலி இருவரும் டி20 போட்டிகளில் 20 முறை 50+ ரன்களை எடுத்து இருந்தனர். டி20 வரலாற்றில் இதுவே அதிகம். இந்தப் பட்டியலில் முதல் இடத்தை இருவரும் பகிர்ந்து கொண்டு இருந்தனர். இந்த நிலையில், இந்த தொடரில் இவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு இந்த சாதனைப் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ரோஹித் அதிரடி ஆட்டம்

ரோஹித் அதிரடி ஆட்டம்

முதல் போட்டியில் இருவரும் அரைசதம் எடுக்கவில்லை. ரோஹித் சர்மா இரண்டாம் டி20 போட்டியில் அதிரடி ஆட்டம் ஆடி 3 சிக்ஸர்கள் அடித்து அரைசதம் கடந்தார். இது ரோஹித்தின் 17வது அரைசதம் ஆகும்.

கோலியை முந்தினார்

கோலியை முந்தினார்

ஏற்கனவே, 4 டி20 சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மா, மொத்தமாக 21 முறை 50+ ரன்களை எடுத்து, விராட் கோலியை முந்தினார். உலக அளவில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக 50+ ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் தனியாக முதல் இடத்தை பிடித்தார் ரோஹித் சர்மா. அதே பட்டியலில் கோலி கீழே இறக்கப்பட்டு இரண்டாம் இடம் பிடித்தார்.

மூன்றாவது இந்தியர்

மூன்றாவது இந்தியர்

இந்தப் பட்டியலில் கோலி, ரோஹித் தவிர்த்து அடுத்த இடத்தில் இருக்கும் இந்திய வீரர் தவான். அவர் 9 முறை மட்டுமே 50+ ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் ரோஹித் - கோலியின் ஆதிக்கம் தான் அதிகம் என்பதற்கு இதுவே சான்று.

அதிக சதங்கள்

அதிக சதங்கள்

ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் நான்கு சதங்கள் அடித்துள்ளார். உலக அளவில் இதுவே அதிகம். அதே சமயம், கோலி டி20யில் இதுவரை ஒரு சதம் கூட அடித்ததில்லை. அவர் எடுத்த 50+ ரன்கள் எல்லாமே அரைசதம் மட்டுமே.

சிக்ஸ், ஃபோர் சாதனைகள்

சிக்ஸ், ஃபோர் சாதனைகள்

அதே போல, இருவரும் இதே தொடரில் இரண்டு முக்கிய சாதனைகளை செய்தனர். டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார் ரோஹித். கோலி அதிக ஃபோர் அடித்த வீரர் என்ற சாதனையை செய்தார்.

Story first published: Monday, August 5, 2019, 10:18 [IST]
Other articles published on Aug 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+