Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவ்ளோ தான்.. கிறிஸ் கெயில் ரெக்கார்டு தரைமட்டம் ஆயிடும்.. ரோஹித் மனசு வைச்சா போதும்!

Recommended Video

ரோஹித் ஷர்மாவுக்கு கெயில் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு... செய்வாரா ?

ப்ளோரிடா : கிறிஸ் கெயில்-இன் டி20 சாதனை ஒன்றை ரோஹித் சர்மா முறியடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி ஆகஸ்ட் 3 முதல் விளையாட உள்ளது. இந்த தொடரில் தான் அந்த வாய்ப்பு ரோஹித் சர்மாவிற்கு கிடைத்துள்ளது.

கிறிஸ் கெயில் மட்டுமின்றி டி20 போட்டிகளிலேயே புதிய சாதனை படைப்பார் ரோஹித் சர்மா.

செம பார்ம்

செம பார்ம்

2019 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நல்ல பார்மில் இருந்தார். உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்து அசத்திய ரோஹித் சர்மா, புதிய சாதனை படைத்தார். எனினும், இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது.

சிக்ஸர் சாதனை

சிக்ஸர் சாதனை

ரோஹித் சர்மா தன் பேட்டிங் பார்மை அப்படியே வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் தொடரும் பட்சத்தில் புதிய சாதனை ஒன்றை படைக்கலாம். இதற்கு ரோஹித் சர்மா செய்ய வேண்டியது எல்லாம் நான்கு சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பது மட்டுமே.

கிறிஸ் கெயில் சாதனை

கிறிஸ் கெயில் சாதனை

கிறிஸ் கெயில் தற்போது 105 சிக்ஸர்கள் அடித்து டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். மார்டின் கப்தில் 103 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ரோஹித் சர்மா 102 சிக்ஸர்கள் அடித்து மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

எளிதான வாய்ப்பு

எளிதான வாய்ப்பு

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் கிறிஸ் கெயில் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. எனவே, ரோஹித் சர்மா நான்கு சிக்ஸர்கள் அடித்தால் மார்ட்டின் கப்தில் மற்றும் கிறிஸ் கெயில் என இருவரையும் தூக்கி அடித்து டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கலாம்.

அதிக ரன்கள் மற்றும் சதங்கள்

அதிக ரன்கள் மற்றும் சதங்கள்

ரோஹித் சர்மா ஏற்கனவே டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் மற்றும் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையை தக்க வைத்துள்ளார். அதோடு அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையையும் தக்க வைக்கலாம்.

ரோஹித்தை சுற்றி சர்ச்சைகள்

ரோஹித்தை சுற்றி சர்ச்சைகள்

சாதனை பற்றிய பேச்சுக்கள் வரும் அதே சமயம், ரோஹித் சர்மா - கோலி இடையே நடக்கும் பனிப்போர் குறித்த விவாதங்களும் நடைபெற்று வருகிறது. ரோஹித் சர்மாவின் பேட்டிங் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை!

Story first published: Friday, August 2, 2019, 16:42 [IST]
Other articles published on Aug 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+