Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒண்ணு இல்லை 3 ரெக்கார்டு இருக்கு.. யுவராஜ் சிங், ஆம்லாவை காலி செய்வாரா ரோஹித் சர்மா?

Recommended Video

3 சாதனைகளுக்க்காக காத்திருக்கும் ரோஹித் சர்மா- வீடியோ

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா முக்கிய சாதனைகளை செய்ய வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக முக்கிய சாதனை ஒன்றில் யுவராஜ் சிங்கை முந்த இருக்கிறார். அதே போல, இந்தப் போட்டியில் சதம் அடித்தால் அதிலும் சில முக்கிய சாதனைகளை செய்வார் ரோஹித் சர்மா. மேலும், கோலி - ரோஹித் கூட்டணியாக முக்கிய சாதனை ஒன்றை செய்ய வாய்ப்புள்ளது.

இந்தியா - வெ.இண்டீஸ்

இந்தியா - வெ.இண்டீஸ்

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறார். டி20 தொடரில் ஒரு அரைசதம் அடித்து இருந்தார். இதுவரை நடந்த ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த நிலையில் இரண்டாம் போட்டியில் பல சாதனைகள் செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டணி சாதனை

கூட்டணி சாதனை

விராட் கோலி - ரோஹித் சர்மா கூட்டணி 27 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மட்டுமே 1000 ரன்கள் குவித்த சாதனையை செய்வர். ஒருநாள் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 1000 ரன்கள் எடுத்த முதல் கூட்டணி என்ற பெருமையையும் பெறுவார்கள்.

சதம் அடித்தால்..

சதம் அடித்தால்..

ரோஹித் சர்மா மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்தால், தன் ஒருநாள் போட்டி சதம் எண்ணிகையை 28ஆக உயர்த்துவார். அதன் மூலம் சமீபத்தில் ஓய்வு பெற்ற ஹஷிம் ஆம்லாவை முந்தி, அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் நான்காம் இடத்தை சனத் ஜெயசூர்யாவுடன் பகிர்ந்து கொள்வார்.

உலகக்கோப்பை பார்ம்

உலகக்கோப்பை பார்ம்

2019 உலகக்கோப்பை தொடரில் ரோஹித் சர்மா நல்ல பார்மில் இருந்தார். ஐந்து சதங்கள் அடித்து புதிய வரலாறு படைத்தார். அதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவும் அவர் சதம் அடிக்க வாய்ப்பு உள்ளது.

யுவராஜ் சிங்கை முந்துவாரா?

யுவராஜ் சிங்கை முந்துவாரா?

மேலும், 26 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் யுவராஜ் சிங்கை முந்தி அதிக ரன்கள் எடுத்து சாதனை புரிவார். யுவராஜ் சிங் ஒருநாள் போட்டிகளில் 8701 ரன்கள் குவித்துள்ளார். ரோஹித் 26 ரன்கள் அடித்து அவரை முந்தி அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்த வீரர்களில் 22ஆம் இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்திய வீரர்கள் வரிசை

இந்திய வீரர்கள் வரிசை

இந்திய அணிக்காக அதிக ஒருநாள் போட்டி ரன்கள் அடித்த பட்டியலில் ஏற்கனவே, யுவராஜ் சிங்கை முந்தி விட்டார் ரோஹித். அது எப்படி சாத்தியம்? யுவராஜ் சிங் ஆசிய லெவன் அணிக்காக 3 போட்டிகளில் 92 ரன்கள் அடித்து இருக்கிறார்.

ஏழாம் இடம்

ஏழாம் இடம்

அந்த வகையில் இந்திய அணிக்காக மட்டும் 8609 ரன்கள் எடுத்துள்ளார் யுவராஜ். ரோஹித் சர்மா இந்திய அணிக்காக 8676 ரன்கள் எடுத்து உள்ளார். இந்திய அளவில் யுவராஜ் சிங்கை முந்தி அதிக ரன்கள் அடித்தவர்களில் ஏழாம் இடத்தில் இருக்கிறார் ரோஹித்.

Story first published: Wednesday, August 14, 2019, 11:26 [IST]
Other articles published on Aug 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+