For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பலே கோலி! எல்லா கதவுகளும் மூடப்பட்டது.. ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இனி வாய்ப்பே கிடைக்காது

Recommended Video

IND vs WI 2019 : Rohit Sharma may never get chance in test matches again

மும்பை : இந்திய டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மாவுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்ற நிலைமை உருவாகி உள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 அணியில் முக்கிய வீரராக இருக்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் அணியில் பல காலமாகவே இடம் இல்லாமல் தவித்து வருகிறார்.

உலகக்கோப்பை தொடரில் கலக்கிய அவருக்கு, டெஸ்ட் அணியில் கதவுகள் திறக்கப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில், எந்த கதவும் இனி திறக்காது என்ற நிலையை கேப்டன் கோலி உருவாக்கி விட்டார்.

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு நிச்சயம் களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்று தான் அனைவரும் நினைத்தனர். ஆனால், இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் அவருக்கு இடம் அளிக்கவில்லை கோலி.

முட்டிக் கொண்ட மூவர்

முட்டிக் கொண்ட மூவர்

முதல் டெஸ்ட்டுக்கு முன் ரஹானே, ஹனுமா விஹாரி என இரு வீரர்களுடன் அணியில் இடம் பெற போட்டி போட வேண்டிய நிலையில் இருந்தார் ரோஹித் சர்மா. இறுதியில் ரஹானே, விஹாரி அணியில் இடம் பெற்றனர்.

ரஹானே, விஹாரி அபாரம்

ரஹானே, விஹாரி அபாரம்

முதல் டெஸ்டில் ரஹானே 81 மற்றும் 102 ரன்கள் குவித்து நீண்ட நாட்களாக சதம் அடிக்காமல் இருந்த குறையை போக்கினார். ஹனுமா விஹாரி 32 மற்றும் 93 ரன்கள் குவித்து அணியில் தன் இடத்தை திடமாக பிடித்துக் கொண்டார்.

அடுத்த டெஸ்டில் யார்?

அடுத்த டெஸ்டில் யார்?

இந்த நிலையில், இரண்டாவது டெஸ்டில் இவர்கள் இருவரே மீண்டும் இடம் பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதால், ரோஹித் சர்மாவுக்கு இந்த டெஸ்டிலும் வாய்ப்பு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கம்பீர் கருத்து

கம்பீர் கருத்து

முன்னாள் வீரர் கம்பீர் முதலில் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி இருந்தார். ஆனால், ரஹானே, விஹாரி ரன் குவித்த பின் ரோஹித் சர்மா தன் வாய்ப்புக்காக காத்திருந்து தான் ஆக வேண்டும் என்றார். இப்படித் தான் ஒரே போட்டியில் ரோஹித் சர்மா நிலைமை தலை கீழ் ஆகி விட்டது.

துவக்க வீரராக ஆடலாமே

துவக்க வீரராக ஆடலாமே

சில முன்னாள் வீரர்கள் ரோஹித் சர்மா துவக்க வீரராக ஆட வேண்டும் என்று கூறி உள்ளனர். சௌரவ் கங்குலி, வீரேந்தர் சேவாக் உள்ளிட்டோர் இதை பல காலமாக கூறி வருகின்றனர்.

ட்விஸ்ட் வைத்த கோலி

ட்விஸ்ட் வைத்த கோலி

கேப்டன் கோலி இங்கேயும் ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இரு போட்டியிலும் ராகுல் - மாயங்க் அகர்வால் தான் ஆடுவார்கள். அவர்கள் இருவரும் இந்த வாய்ப்புகளில் தங்களை நிரூபிக்க வேண்டும் என அவர் தொடருக்கு முன்பே கூறிவிட்டார்.

இட நெருக்கடி

இட நெருக்கடி

இதற்கு அணியில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடி தான் காரணம். ராகுல், மாயங்க் அகர்வாலை தாண்டி, தடையில் இருக்கும் ப்ரித்வி ஷாவும் இன்னும் சில மாதங்களில் அணிக்கு திரும்புவார். அவருக்கும் இடம் அளிக்க வேண்டும்.

வதந்தி உண்மையா?

வதந்தி உண்மையா?

ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காது என்பதே தற்போது உள்ள நிலைமை. இப்படி ஒரு இக்கட்டில் கோலி தான் சிக்க வைத்தார். அதற்கு காரணம், இருவருக்கும் இடையே இருக்கும் விரிசல் தான் என ரசிகர்கள் சிலர் கூறி வருவதையும் பார்க்க முடிகிறது.

அஸ்வினுக்கும் இடம் இல்லை

அஸ்வினுக்கும் இடம் இல்லை

ரோஹித் சர்மா தவிர்த்து, டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சாளராக பல சாதனைகள் செய்து, நல்ல பார்மில் இருக்கும் அஸ்வினுக்கும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, August 30, 2019, 12:52 [IST]
Other articles published on Aug 30, 2019
English summary
IND vs WI 2019 : Rohit Sharma may never get chance in test matches again
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+