Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மரண மாஸ்.. இனி ரோஹித் தான் டி20 பாஸ்.. கிறிஸ் கெயில் முக்கிய டி20 ரெக்கார்டை அடிச்சு தூக்கியாச்சு!

Recommended Video

IND VS WI 2ND T20 | ROHIT SHARMA | கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்த ரோஹித் சர்மா

ப்ளோரிடா : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா மிக முக்கியமான டி20 சாதனை ஒன்றை செய்தார்.

இந்தியா - வெ.இண்டீஸ் இடையே ஆன இரண்டாவது டி20 போட்டி ப்ளோரிடாவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா அபார ஆட்டம் ஆடினார். உலகக்கோப்பை தொடரில் இருந்த அதே பார்மை இந்தப் போட்டியிலும் வெளிப்படுத்தினார்.

நான்கு சிக்ஸர்கள் தேவை

நான்கு சிக்ஸர்கள் தேவை

வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கு முன்னதாக ரோஹித் சர்மா நான்கு சிக்ஸர்கள் அடித்தால் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை படைக்கலாம் என்ற நிலை இருந்தது. ரோஹித் 102 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். கிறிஸ் கெயில் 105 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருந்தார்.

முதல் போட்டியில் சிக்ஸ்

முதல் போட்டியில் சிக்ஸ்

இந்த நிலையில், முதல் டி20 போட்டியில் ரோஹித் சர்மா இரண்டு சிக்ஸர்கள் அடித்து 24 ரன்கள் எடுத்தார். அதன் மூலம் 104 சிக்ஸர்கள் என்ற நிலைக்கு உயர்ந்தார். இரண்டாவது டி20யில் இரண்டு சிக்ஸர் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

அதிரடி அரைசதம்

அதிரடி அரைசதம்

இரண்டாம் போட்டியில் அதிரடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா மூன்று சிக்ஸர்கள் அடித்தார். அதன் மூலம், தன் டி20 சிக்ஸர் எண்ணிக்கையை 107ஆக உயர்த்தினார். மேலும், கிறிஸ் கெயில் சாதனையை முந்தினார்.

முதல் இடம்

முதல் இடம்

ரோஹித் சர்மா 107 சிக்ஸர்கள் அடித்து டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். கிறிஸ் கெயில் தற்போது 105 சிக்ஸர்கள் அடித்து டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். மார்டின் கப்தில் 103 சிக்ஸர்களுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

அதிக சதங்கள்

அதிக சதங்கள்

டி20களில் அதிக ரன்கள் எடுத்த வீரர், நான்கு சதங்கள் அடித்து அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனைகளை தன் வசம் வைத்துள்ளார் ரோஹித் சர்மா. அதோடு அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்துள்ளார் ரோஹித்.

Story first published: Sunday, August 4, 2019, 22:27 [IST]
Other articles published on Aug 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+