போட்டியில் அந்த சம்பவம் நடக்கும்.. அப்ப ரோஹித்தை உற்றுப் பார்க்கணும்.. கண்டிப்பா சிக்குவார்!
Recommended Video
ப்ளோரிடா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை ரோஹித் சர்மா மீது தான் இருக்கப் போகிறது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது.
இந்திய அணி ஆகஸ்ட் 3 அன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் பங்கேற்க உள்ளது.
உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணி பங்கேற்கும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதோடு ரோஹித் சர்மா என்ன செய்யப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் இருப்பதால், முதல் டி20 போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

ரோஹித் - கோலி சண்டையா?
ரோஹித் சர்மாவுக்கும் - விராட் கோலிக்கும் சண்டை என உலகக்கோப்பை முடிந்ததில் இருந்து, கடந்த இரண்டு வாரங்களாக வரும் தகவல்கள் உண்மையா எனத் தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர் இந்திய ரசிகர்கள்.

ரசிகர்கள் குழப்பம்
இது வரை நடந்த சம்பவங்களை பார்த்தால் சண்டை தான் போல என்று தோன்றுகிறது. ஆனால், பிசிசிஐ, கோலி இதை மறுத்துள்ளனர். அதனால், இந்திய அணியில் என்ன தான் நடக்கிறது என்ற குழப்பம் அனைவருக்கும் உள்ளது.

ரோஹித் அன்பாலோ
குறிப்பாக, ரோஹித் சர்மா, கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை இன்ஸ்டாகிராமில் அன்பாலோ செய்தது குறித்த தகவல் வெளியாகும் வரை பலரும் ரோஹித் - கோலி விரிசல் வதந்தியாக இருக்கவே வாய்ப்பு உள்ளது என நம்பி வந்தனர்.

பிசிசிஐ மறுப்பு
இதன் பின்னர், பிசிசிஐ அணியில் எந்த பிரச்சனையும் இல்லை என காட்டிக் கொள்ள போராடியது. எல்லாமே ஊடகங்களின் கட்டுக்கதைகள் என கூறியது. வீரர்கள் வந்து பேசினால் தான் பிரச்சனை என நாங்கள் எடுத்துக் கொள்ள முடியும். வதந்தியை வைத்து நாங்கள் விசாரணை செய்ய மாட்டோம் எனக் கூறி இந்த விஷயத்தை அமுக்கியது.

கோலி பேட்டி
இதன் பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன் கேப்டன் கோலி பேட்டி கொடுக்கவே மாட்டார் என தகவல் வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அவர் பேட்டி அளிப்பார் என்றது பிசிசிஐ. அவரும் பத்திரிக்கையாளர்களை தயக்கத்துடன், அதே சமயம் அமைதியான மனநிலையுடன் சந்தித்தார். அப்போது இந்திய அணிக்குள் நிலவும் பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது.

கோலி வருத்தம்
கோலி மிகவும் மன வருத்தத்துடன் எல்லாமே வதந்தி என கூறினார். அருகில் இருந்த ரவி சாஸ்திரி, கோபத்துடன் இதே விஷயத்துக்கு பதில் அளித்தார். அதனால், உண்மையா? பொய்யா? என தெரியாத சூழலே நிலவுகிறது.

சமரச முயற்சி
இந்த நிலையில், பிசிசிஐ வெளியில் பிரச்சனை இல்லை என கூறிக் கொண்டு, அமெரிக்காவில் தொடங்க உள்ள டி20 தொடரின் போது கோலி - ரோஹித் இடையே சமரசம் செய்ய உள்ளது என கூறப்படுகிறது.

உண்மையா? பொய்யா?
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட ரோஹித் சர்மா இதுவரை வெளியில் வரவில்லை. இதுபற்றி எங்கேயும் கருத்து கூறவில்லை. அதனால், முதல் டி20 போட்டி நடக்கும் போது, ரோஹித் சர்மாவின் நடவடிக்கைகள் மூலம் கோலியுடன் அவர் சுமூகமாக இருக்கிறாரா? இல்லையா? என்பதை கண்டுபிடித்து விடலாம் என நெட்டிசன்கள் நம்புகிறார்கள்.

கோலி - ரோஹித் பேட்டிங்
கோலியுடன் ரோஹித் பேட்டிங் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அப்படி ஒரு விஷயம் நடந்தால் அதை ஒரு நொடி கூட விடாமல் கவனித்து, ஏதாவது ஒரு ஃபிரேமில் ரோஹித்தின் அசைவில் வெறுப்பு, கோபம் அல்லது விரிசலை நிரூபிக்கும் ஒரு அசைவு கிடைத்தாலும் அதை வைத்து இணையத்தை தெறிக்க விடக் காத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள். அதற்குள் சமரசம் செய்து விடுமா பிசிசிஐ?


Click it and Unblock the Notifications