Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க ரன் அடிக்கலை.. செஞ்சுரி அடித்து ரோஹித், தவானை குத்திக் காட்டிப் பேசிய கோலி.. என்ன சொன்னார்?

போர்ட் ஆஃப் ஸ்பெயின் : கோலி சதம் அடித்து முடித்து விட்டு ரோஹித் சர்மா, தவான் பெயரை குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். ஐந்து மாதங்கள் கழித்து அடித்த சதம் என்பதால் அவர் ரசிகர்கள் இதைக் கொண்டாடினர்.

இந்திய அணி இந்தப் போட்டியில் டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஹித், தவான் சொதப்பல்

ரோஹித், தவான் சொதப்பல்

ரோஹித் சர்மா, ஷிகர் தவான் இந்தப் போட்டியில் சொதப்பினர். தவான் போட்டியின் மூன்றாவது பந்திலேயே 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா நீண்ட நேரம் களத்தில் இருந்தாலும், 34 பந்துகளை சந்தித்து 18 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அசத்தல் பேட்டிங்

அசத்தல் பேட்டிங்

அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையில் கோலி தொடர்ந்து சிறப்பாக ஆடி சதம் கடந்தார். தன் 42வது ஒருநாள் போட்டி சதம் கடந்த கோலி, 120 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இந்தியா 50 ஓவர்களில் 279 ரன்கள் குவித்தது.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருது

வெஸ்ட் இண்டீஸ் அணி சேஸிங்கின் போது மழை குறுக்கிட்டது. மேலும், இந்திய அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கோலி ஆட்டநாயகன் விருது வென்றார். அப்போது தன் சதம் குறித்து பேசினார் கோலி.

கோலி சீண்டல்

கோலி சீண்டல்

"அணிக்கு அவசியமான நேரத்தில் சதம் அடித்தது நல்ல உணர்வை அளிக்கிறது. ஷிகர், ரோஹித் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. முதல் மூன்று பேரில் ஒருவர் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். ஒரு மூத்த வீரர் முன்னே வந்து அடித்து ஆட வேண்டும். இன்று என்னுடைய வாய்ப்பு" என்று குறிப்பிட்டார் கோலி.

மோதல் உண்மையா?

மோதல் உண்மையா?

ஏற்கனவே, ரோஹித் - கோலி இடையே மோதல் இருப்பதாக வதந்திகள் பெருகி வரும் வேளையில் தன் சதத்தை குறிப்பிடும் போது, ரோஹித் சர்மா, தவான் ரன் எடுக்கவில்லை என குத்திக் காட்டி பேசியதைப் போல பேசி இருக்கிறார் கோலி. ஒருவேளை சண்டை உண்மையா இருக்குமோ?

டாஸ் வெற்றி முக்கியம்

டாஸ் வெற்றி முக்கியம்

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணம் டாஸ் தான். போட்டியில் மழை வரலாம் என்பதோடு, ஆடுகளம் முதலில் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்தது, அதனால், டாஸ் வென்ற கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதுவே வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.

Story first published: Monday, August 12, 2019, 11:51 [IST]
Other articles published on Aug 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+