என்னை மீறி சிக்ஸ் போயிருமா? உசுரைக் கொடுத்து பீல்டிங் செய்து.. மிரள வைத்த வெ.இண்டீஸ் வீரர்!

மும்பை : இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஈவின் லீவிஸ் பீல்டிங்கில் மிரட்டினார்.

ரோஹித் சர்மா அடித்த சிக்ஸ் ஒன்றை தடுத்த அவர், அத்தோடு ரன் அவுட் செய்யவும் முயற்சி செய்து மிரள வைத்தார்.

அடுத்த சில ஓவர்களில் அவர் பீல்டிங்கின் போது முட்டியில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாமல் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.

29 பந்தில் 70 ரன்.. நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. தாண்டவம் ஆடிய இந்திய கேப்டன்!

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி தொடரை வெல்லும் அணியை நிர்ணயிக்கும் முக்கிய போட்டியாக நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

ரோஹித் ஆட்டம்

ரோஹித் ஆட்டம்

துவக்க வீரர் ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். எனினும், அவர் 30 ரன்களை எட்டும் முன்பே ஆட்டமிழந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பம் ஒன்று வந்தது.

அந்த பந்து

அந்த பந்து

ஐந்தாவது ஓவரில் முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டி விட்டு, இரண்டாவது பந்தையும் தூக்கி சிக்ஸுக்கு அடித்தார் ரோஹித். ஆனால், பவுண்டரி எல்லையில் நின்று இருந்த ஈவின் லீவிஸ் பந்தை சிக்ஸ் போக விடாமல் தடுத்தார்.

பகீரத முயற்சி

பகீரத முயற்சி

மேலே பறந்து சென்ற பந்தை எகிறி ஒற்றைக் கையில் பிடித்த லீவிஸ், எப்படியும் தான் பவுண்டரி எல்லையை தாண்டி விழுவோம் என்பதை அறிந்து, கேட்ச் பிடிக்கும் வாய்ப்பை விட்டுவிட்டு ரன்னை கட்டுப்படுத்த முயற்சி செய்தார்.

ரோஹித் தப்பினார்

பந்தை ஒற்றைக் கையில் பிடித்த அவர், அப்படியே பந்தை உள்ளே வீசி விட்டு, பவுண்டரி எல்லையை தாண்டி, விளம்பர பலகைகள் மேல் விழுந்தார். இதன் மூலம், ரோஹித் அவுட் ஆகும் வாய்ப்பில் நூலிழையில் தப்பினார்.

ரன் அவுட் முயற்சி

ரன் அவுட் முயற்சி

சிக்ஸ் போவதை தடுத்த லீவிஸ், பவுண்டரி எல்லைக்கு உலகக்கோப்பை மீண்டும் வந்து பந்தை எடுத்து வீசினார். அப்போது இரண்டாவது ரன் ஓடும் போது ரன் அவுட் ஆகி இருப்பார் ரோஹித். எனினும், அதிலும் நூலிழையில் தப்பினார்.

நான்கு ரன்களை தடுத்தார்

நான்கு ரன்களை தடுத்தார்

அந்த பந்தில் ரோஹித் சர்மா சிங்கிளாக ஓடி, 2 ரன்கள் மட்டுமே எடுத்தார். அணிக்காக உயிரைக் கொடுத்து பீல்டிங் செய்து கூடுதலாக கிடைக்க வேண்டிய நான்கு ரன்களை தடுத்தார் ஈவின் லீவிஸ்.

காலில் காயம்

பின்னர், மற்றொரு பீல்டிங் முயற்சியின் போது அவரது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. அப்போது கீழே படுத்து விட்டார் லீவிஸ். பின் அவரை மருத்துவ பரிசோதனைக்குப் பின் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Evin Lewis fielding effort stunned everyone. Rohit Sharma escapes twice in this effort.
Story first published: Wednesday, December 11, 2019, 23:09 [IST]
Other articles published on Dec 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X