For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்ஸர் மழை.. டபுள் சதம்.. அதிரடி விக்கெட் வேட்டை.. வெ.இண்டீஸ்-க்கு சம்மட்டி அடி கொடுத்த இந்தியா!

Recommended Video

India vs West Indies 2nd ODI | India won by 107 runs

விசாகப்பட்டினம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி, அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் களமிறங்கியது.

இந்தப் போட்டியில் சிவம் துபேவை நீக்கி விட்டு, ஷர்துல் தாக்குரை அணியில் சேர்த்தார் கேப்டன் கோலி.

டாஸ் வென்ற வெ.இண்டீஸ்

டாஸ் வென்ற வெ.இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு ராகுல் - ரோஹித் சர்மா ஜோடி அபார துவக்கம் அளித்தது.

ராகுல், ரோஹித் அபாரம்

ராகுல், ரோஹித் அபாரம்

இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 227 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 102 ரன்களும், ரோஹித் சர்மா 159 ரன்களும் குவித்து மிரட்டினர். அடுத்து வந்த கேப்டன் கோலி தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

ஸ்ரேயாஸ் - பண்ட் அதிரடி

ஸ்ரேயாஸ் - பண்ட் அதிரடி

அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பண்ட் இருவரும் இரண்டு ஓவர்களில் 55 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியை நிலைகுலைய வைத்தனர். ஸ்ரேயாஸ் 33 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். பண்ட் 16 பந்துகளில் 39 ரன்கள் குவித்தார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஜேசன் ஹோல்டர் மட்டுமே குறைவாக ரன்கள் கொடுத்தார். அவர் 9 ஓவர்கள் வீசி 45 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழந்து 387 ரன்கள் குவித்தது.

அதிக சிக்ஸர்கள்

அதிக சிக்ஸர்கள்

இந்திய அணி 16 சிக்ஸர்கள் அடித்ததும் இந்தப் போட்டியில் முக்கிய விஷயமாக அமைந்தது. ரோஹித் 5, ராகுல் 3, ஸ்ரேயாஸ் ஐயர் 4, ரிஷப் பண்ட் 4 சிக்ஸர்கள் அடித்தனர்.

வெ.இண்டீஸ் ஏமாற்றம்

வெ.இண்டீஸ் ஏமாற்றம்

அடுத்து 388 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடியது அதிரடி பேட்ஸ்மேன்கள் படை கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி. துவக்க வீரர் ஈவின் லீவிஸ் 30 ரன்களிலும், முதல் போட்டியில் சதம் அடித்து மிரட்டிய ஹெட்மயர் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நிக்கோலஸ் பூரன் அதிரடி

நிக்கோலஸ் பூரன் அதிரடி

அடுத்து வந்த ராஸ்டன் சேஸ் 4 ரன்களில் வெளியேறினார். அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் 47 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். அவரை வெளியேற்றும் வரை இந்திய அணி பதற்றத்தில் இருந்தது.

ஷமி, குல்தீப் விக்கெட் வேட்டை

ஷமி, குல்தீப் விக்கெட் வேட்டை

ஷமி வீசிய 30வது ஓவரில் பூரன் 75, பொல்லார்டு 0 ரன்களில் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தனர். அது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. குல்தீப் யாதவ் 33வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை செய்தார்.

வெ.இண்டீஸ் தோல்வி

வெ.இண்டீஸ் தோல்வி

அத்துடன் 8 விக்கெட்கள் இழந்தது வெஸ்ட் இண்டீஸ். கீமோ பால் 46 ரன்கள் அடித்து தோல்வி வித்தியாசத்தை குறைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 280 ரன்கள் மட்டுமே எடுத்து, 1௦7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா சமநிலை

இந்தியா சமநிலை

இந்த வெற்றி மூலம் இந்தியா ஒருநாள் தொடரில் 1 - 1 என சமநிலையை எட்டியது, மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, December 18, 2019, 21:59 [IST]
Other articles published on Dec 18, 2019
English summary
India vs West Indies 2nd ODI : India beat West Indies by 107 runs.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+