Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 ஓவரில் 127 ரன்கள்.. விரட்டி விரட்டி அடித்த இந்தியா.. நொந்து நூடுல்ஸ் ஆன வெ.இண்டீஸ்!

Recommended Video

India vs West Indies 2nd ODI | India sets target of 388 runs to W Indies

விசாகப்பட்டினம் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 387 ரன்கள் குவித்தது.

ரோஹித் சர்மா - கேஎல் ராகுல் துவக்க ஜோடி அபாரமாக ஆடியது. இருவரும் சதம் அடித்தனர். அடுத்து வந்த ஸ்ரேயாஸ், பண்ட் அதிரடியாக சிக்ஸ் மழை பொழிந்தனர்.

இந்திய அணியின் அதிரடியில் நிலைகுலைந்து போனது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இரண்டாவது ஒருநாள் போட்டி

இரண்டாவது ஒருநாள் போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அடுத்த இரு போட்டிகளில் இந்தியா வென்றால் மட்டுமே தொடரைக் கைப்பற்ற முடியும் என்ற நிலையில் உள்ளது.

டாஸ் முடிவு

டாஸ் முடிவு

இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்றது. முதல் போட்டி போலவே இந்த முறையும் பந்துவீச்சை தேர்வு செய்தது அந்த அணி. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் சிவம் துபே நீக்கப்பட்டு, ஷர்துல் தாக்குர் அணியில் சேர்க்கப்பட்டு இருந்தார்.

இந்திய அணி விவரம்

இந்திய அணி விவரம்

இரண்டாவது போட்டியில் ஆடும் இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, குல்தீப் யாதவ்

 பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணிக்கு ராகுல், ரோஹித் சர்மா ஜோடி துவக்கம் அளித்தது. இந்த ஜோடி துவக்கம் முதலே ரன் குவிக்கத் துவங்கியது. 10 ஓவர்களில் 55 ரன்களை கடந்த இந்த ஜோடி தொடர்ந்து ரன் குவித்தது.

ரோஹித், ராகுல் அபாரம்

ரோஹித், ராகுல் அபாரம்

ரோஹித், ராகுல் இருவரும் சதம் கடந்து ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா 159 ரன்கள் வரை குவித்தார். ராகுல் 102 ரன்கள் எடுத்தார். கோலி டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.

பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி

பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி

46வது ஓவரில் பண்ட் சிக்ஸ், பவுண்டரி மழை பொழிய, அதற்கு அடுத்த ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் சிக்ஸர் வேட்டை நடத்தி வெஸ்ட் இண்டீஸ் அணியை தவிக்க வைத்தார். இந்த இரண்டு ஓவரில் மட்டுமே இந்தியா 55 ரன்கள் குவித்தது. பண்ட் 39, ஸ்ரேயாஸ் 53 ரன்கள் குவித்தனர்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

கடைசி 10 ஓவர்களில் மட்டும் 127 ரன்கள் குவித்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் 5 இழப்பிற்கு 387 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 388 ரன்கள் என்ற சவாலான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Story first published: Wednesday, December 18, 2019, 18:24 [IST]
Other articles published on Dec 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+