For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திக் திக் கிளைமாக்ஸ்.. கடைசியில் சர்ப்ரைஸ் தந்த இளம் வீரர்.. வெ.இண்டீஸ்-ஐ வீழ்த்திய இந்தியா!

Recommended Video

Ind vs WI Series 3rd ODI | India won by 4 wickets

கட்டாக் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2 - 1 என கைப்பற்றியது இந்தியா.

வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி நேரம் வரை இந்தியாவை துரத்திக் கொண்டே வந்தது. கோலி விக்கெட் வீழ்ந்த போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக ஆனது.

ஆச்சரியம் அளித்த வீரர்

ஆச்சரியம் அளித்த வீரர்

எனினும், அடுத்து வந்த எட்டாவது பேட்ஸ்மேன் ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஆடி வெற்றியை எளிதாக மாற்றினார். இந்தியா 48.3 ஓவர்களிலேயே வெற்றி கண்டது. ஜடேஜா கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார்.

வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா 1 - 1 என சமநிலையில் இருந்தது. கடைசிப் போட்டியில் வென்றால் தான் தொடரை வெல்ல முடியும் என்ற சூழலில் இந்தியா களமிறங்கியது.

வெ.இண்டீஸ் நிதான ஆட்டம்

வெ.இண்டீஸ் நிதான ஆட்டம்

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி. வெஸ்ட் இண்டீஸ் அணியில் லீவிஸ் 21, சேஸ் 38, ஹோப் 43, ஹெட்மயர் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 30வது ஓவர் வரை ஓவருக்கு 5 ரன்களுக்கும் குறைவாகவே ரன் எடுத்து வந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அடுத்து நிக்கோலஸ் பூரன், கேப்டன் கீரான் பொல்லார்டு முதலில் நிதானமாக ரன் சேர்த்து பின் கடைசி ஓவர்களில் சிக்ஸர், ஃபோர் விளாசி அதிரடி காட்டினர். கடைசி 10 ஓவர்களில் மட்டுமே வெஸ்ட் இண்டீஸ் அணி 118 ரன்கள் குவித்தது.

வெ.இண்டீஸ் ரன் குவிப்பு

வெ.இண்டீஸ் ரன் குவிப்பு

பூரன் 64 பந்துகளில் 89 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த நிலையில், பொல்லார்டு கடைசி வரை நின்று 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இருந்தார். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்கள் இழந்து 315 ரன்கள் குவித்தது. சைனி 2, ஷமி 1, ஷர்துல் தாக்குர் 1, ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

காற்றில் ஈரப்பதம்

காற்றில் ஈரப்பதம்

316 ரன்கள் என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு பனிப்பொழிவால் காற்றில் இருந்த ஈரப்பதம் சாதகமாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள் ஈரப்பதத்துடன் பந்து வீச திணறினர்.

ரோஹித், ராகுல் அபாரம்

ரோஹித், ராகுல் அபாரம்

அதை பயன்படுத்திக் கொண்ட ரோஹித் சர்மா 63, ராகுல் 77 ரன்கள் குவித்தனர். அடுத்து கோலி நிதானமாக ரன் சேர்த்து விக்கெட் விழாமல் ஆடி வந்தார். எனினும் ஸ்ரேயாஸ் ஐயர் 7, ரிஷப் பண்ட் 7, ஜாதவ் 9 ரன்களில் ஆட்டமிழந்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினர்.

கோலி விக்கெட்

கோலி விக்கெட்

பின் ஜடேஜா, கோலிக்கு ஒத்துழைத்து ஆடி வந்தார். 46.1 ஓவரில் வெற்றிக்கு 30 ரன்கள் தேவை என்ற நிலையில் 85 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார் கோலி. அது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரிய திருப்பமாக அமைந்தது.

ஷர்துல் தாக்குர் அதிரடி

ஷர்துல் தாக்குர் அதிரடி

எனினும், அடுத்து வந்த ஷர்துல் தாக்குர் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி ஆட்டம் ஆடினார். வந்தவுடன் ஒரு ஃபோர் அடித்த அவர், 48 வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் அடித்து 15 ரன்கள் சேர்க்க காரணமாக இருந்தார்.

இந்தியா வெற்றி

இந்தியா வெற்றி

கடைசி 2 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் ஜடேஜா 49வது ஓவரில் வெற்றி தேடித் தந்தார். தாக்குர் 6 பந்துகளில் 17 ரன்களும், ஜடேஜா 39 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம், இந்தியா ஒருநாள் தொடரை 2 - 1 என கைப்பற்றியது.

Story first published: Sunday, December 22, 2019, 22:26 [IST]
Other articles published on Dec 22, 2019
English summary
IND vs WI : India vs West Indies 3rd ODI match result and highlights with updates.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+