Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிக்ஸர் தாக்குதல் நடத்திய ரோஹித், கோலி.. மிரண்டு போன வெ.இண்டீஸ்.. இந்தியா அபார வெற்றி!

மும்பை : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்தியா சிக்ஸர் தாக்குதல் நடத்தியது. ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சேர்ந்து 12 சிக்ஸர்கள் விளாசினார். ராகுல் 4 சிக்ஸர்கள் உட்பட 91 ரன்கள் குவித்தார்.

இந்தியா நிர்ணயித்த இமாலய இலக்கை எட்ட முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் முடிந்த வரை போராடி தோல்வி அடைந்தது.

முக்கியமான போட்டி

முக்கியமான போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரு அணிகளும் 1 - 1 என சமநிலையில் இருந்தன. மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்ற நிலையில் இரு அணிகளும் களமிறங்கின.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் குவித்தனர்.

ரோஹித் ரன் குவிப்பு

ரோஹித் ரன் குவிப்பு

ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்து வில்லியம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தன் பேட்டிங்கில் அவர் 6 ஃபோர், 5 சிக்ஸ் அடித்து இருந்தார்.

பண்ட் ஏமாற்றம்

பண்ட் ஏமாற்றம்

ரோஹித் சென்ற பின் மூன்றாம் வரிசையில் அதிரடி ஆட்டத்தை தொடர வந்தார் ரிஷப் பண்ட். ஆனால், அவர் வந்த வேகத்தில் 2 பந்துகளில் டக் அவுட் ஆகி நடையைக் கட்டினார்.

அதிரடியை தொடர்ந்த கோலி

அதிரடியை தொடர்ந்த கோலி

அடுத்து விராட் கோலி களமிறங்கினார். அவர் ரோஹித் சர்மா விட்ட அதிரடியை அப்படியே தொடர்ந்தார். உடன் ராகுலும் சிறப்பாக ரன் குவித்தார். ராகுல் 56 பந்துகளில் 91 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இந்தியா ஸ்கோர்

இந்தியா ஸ்கோர்

கோலி 7 சிக்ஸ் அடித்து மிரட்ட இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்தது. கோலி 29 பந்துகளில் 70 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார்.

வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்

வெஸ்ட் இண்டீஸ் போராட்டம்

வெஸ்ட் இண்டீஸ் அணி 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி தடுமாற்றத்துடன் பேட்டிங் செய்தது. 17 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. ஹெட்மையர் 41 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.

பொல்லார்டு அதிரடி ஆட்டம்

பொல்லார்டு அதிரடி ஆட்டம்

கேப்டன் கீரான் பொல்லார்டு மட்டுமே தனி ஆளாக போராடினார். அவர் 39 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். எனினும், மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். வெ.இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பந்துவீச்சு அபாரம்

பந்துவீச்சு அபாரம்

இந்திய அணியின் பதுவீச்சு அபாரமாக அமைந்தது. தீபக் சாஹர், ஷமி, வாஷிங்க்டன் சுந்தர் ஆகியோர் ஓவருக்கு 5 முதல் 6 ரன்கள் வரை மட்டுமே கொடுத்தனர். தீபக் சாஹர் 2, ஷமி 2, குல்தீப் 2, புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

தொடர் வெற்றி

தொடர் வெற்றி

67 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி டி20 தொடரை 2 - 1 என கைப்பற்றியது. 91 ரன்கள் குவித்த ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார். விராட் கோலி தொடர் நாயகன் விருதை வென்றார்.

Story first published: Wednesday, December 11, 2019, 23:37 [IST]
Other articles published on Dec 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+