எந்த இந்திய வீரரும் செய்யாத வரலாற்று சாதனை.. சிக்ஸர் மன்னன்.. மீண்டும் நிரூபித்த ஹிட்மேன்!

Rohith sharma Hit 400 International Sixes|400 சிக்ஸ் அடித்த முதல் இந்தியன் ரோஹித் சர்மா

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்த இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்யாத சாதனை ஒன்றை செய்தார்.

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சிக்ஸர் அடிப்பதில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார் ரோஹித் சர்மா.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்காத ரோஹித் சர்மா, மூன்றாவது போட்டியில் தாண்டவம் ஆடினார். அப்போது தான் இந்த சிக்ஸர் சாதனையையும் எட்டினார் அவர்.

மூன்றாவது டி20

மூன்றாவது டி20

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது டி20 போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ராகுல் சிறப்பான அதிரடி துவக்கம் அளித்தனர். இருவரும் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து தள்ளினர்.

அதிரடி துவக்கம்

அதிரடி துவக்கம்

ராகுல், ரோஹித் சர்மா இருவருமே சிக்ஸர்களை பறக்க விட்டனர். பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் இந்தியா 72 ரன்களை குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 135 ரன்கள் குவித்தது இந்த துவக்க ஜோடி. இருவருமே அரைசதம் கடந்தனர்.

அதிரடி அரைசதம்

அதிரடி அரைசதம்

ரோஹித் சர்மா 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்து தெறிக்கவிட்டார். அதில் 5 சிக்ஸர், 6 ஃபோர் அடங்கும். 71 ரன்கள் எடுத்த நிலையில் கேஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ரோஹித்.

முதல் சிக்ஸ்

முதல் சிக்ஸ்

அவர் இந்தப் போட்டிக்கு முன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 399 சிக்ஸர்கள் அடித்து இருந்தார். இந்தப் போட்டியில் முதல் சிக்ஸ் அடித்த போது 400 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

மைல்கல் சாதனை

மைல்கல் சாதனை

இந்திய வீரர்களில் இந்த மைல்கல்லை எட்டும் முதல் வீரர் ரோஹித் சர்மா தான். கிரிக்கெட் உலகில் சிக்ஸர் மன்னனாக வலம் வரும் ரோஹித், உலக அளவில் இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது வீரர் ஆவார். மேலும், குறைந்த இன்னிங்க்ஸ்களில் இதை எட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் அடித்த சிக்ஸர்கள்

ரோஹித் அடித்த சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 232 சிக்ஸர்கள், டெஸ்ட் போட்டிகளில் 52 சிக்ஸர்கள் மற்றும் டி20 போட்டிகளில் 116 சிக்ஸர்கள் என மூன்று வித சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

முதல் இரண்டு இடம்

முதல் இரண்டு இடம்

ரோஹித் சர்மாவுக்கு முன்னதாக இந்த மைல்கல்லை எட்டிய இரண்டு வீரர்கள் கிறிஸ் கெயில் மற்றும் அப்ரிடி. சர்வதேச அரங்கில் கிறிஸ் கெயில் இதுவரை 534 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அப்ரிடி 476 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.

மூன்று ஆண்டுகள்

மூன்று ஆண்டுகள்

ரோஹித் சர்மா இந்த ஆண்டுடன் சேர்த்து தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை செய்து வருகிறார். 2017இல் 65 சிக்ஸர்களும், 2018இல் 74 சிக்ஸர்களும் அடித்து உள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Rohit Sharma achieved a historic six record in international cricket. He is the first Indian cricketer to surpass 400 sixes.
Story first published: Wednesday, December 11, 2019, 20:39 [IST]
Other articles published on Dec 11, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X