Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுக்கு பேசாம வீட்லயே இருந்திருக்கலாம்.. சொல்ல சொல்ல கேட்காமல் மாட்டிக் கொண்ட சீனியர் வீரர்!

திருவனந்தபுரம் : இந்திய அணியின் துவக்க வீரர் ரோஹித் சர்மா பெரிய அளவில் ரன் குவிப்பார் என எதிர்பார்த்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரின் இரண்டாவது போட்டியிலும் சொதப்பினார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோஹித் சர்மாவை ஓய்வு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது தேர்வுக் குழு. ஆனால், ரோஹித் கண்டிப்பாக தான் ஆடுவேன் எனக் கூறி இந்த தொடரில் பங்கேற்றார்.

ரோஹித் ஏமாற்றம்

ரோஹித் ஏமாற்றம்

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா 15 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். சர்வதேச அளவில் கடைசி ஐந்து இன்னிங்க்ஸ்களில் தொடர்ந்து ரோஹித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

சிறப்பான பார்ம்

சிறப்பான பார்ம்

ரோஹித் சர்மா உலகக்கோப்பை தொடர் முதல் உச்சகட்ட பார்மில் இருக்கிறார். உலகக்கோப்பை தொடருக்குப் பின் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் சதமாக விளாசித் தள்ளினார்.

ஓய்வு வேண்டும்

ஓய்வு வேண்டும்

ரோஹித் சர்மா நல்ல பார்மில் இருந்தாலும், கடந்த ஓராண்டில் மட்டும் ஓய்வு இல்லாமல், ஐபிஎல் உட்பட 60 போட்டிகளுக்கும் மேல் ஆடி விட்டதால் அவருக்கு நிச்சயம் ஓய்வு தேவை என தேர்வுக் குழு முடிவு செய்தது.

மறுத்த ரோஹித் சர்மா

மறுத்த ரோஹித் சர்மா

ஆனால், ரோஹித் சர்மா தனக்கு ஓய்வு வேண்டாம் என மறுத்தார். வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ஓய்வை மறுத்து இடம் பெற்றார் ரோஹித். முதல் இரண்டு போட்டிகளில் அவர் சொதப்பலாக ஆடி இருப்பதால் அவரது முடிவு சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பின் வங்கதேச டி20 தொடரில் ஆடிய ரோஹித், அதில் மூன்று போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டும் 85 ரன்கள் குவித்தார். மற்ற இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.

குறைந்த ஸ்கோர்கள்

குறைந்த ஸ்கோர்கள்

அடுத்து நடந்த வங்கதேச டெஸ்ட் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் சொதப்பி இருக்கிறார் ரோஹித் சர்மா. கடைசி ஐந்து சர்வதேச இன்னிங்க்ஸ்களில் அவர் எடுத்த ஸ்கோர் - 2, 6, 21, 8, 15 மட்டுமே.

இரண்டாவது டி20 போட்டி

இரண்டாவது டி20 போட்டி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ரோஹித் 18 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். உடன் ஆடிய துவக்க வீரர் ராகுல் 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பௌல்டு அவுட்

பௌல்டு அவுட்

இந்த நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அழுத்தம் அதிகரித்தது. அப்போது ஹோல்டரின் பந்துவீச்சில் பௌல்டு அவுட் ஆனார் ரோஹித். அவர் தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தேவையற்ற விமர்சனம்

தேவையற்ற விமர்சனம்

ரோஹித் சர்மா ஓய்வை மறுத்து ஆடி வரும் நிலையில், அவர் மறுப்பு தெரிவிக்காமல் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கலாம் என்ற விமர்சனம் எழத் துவங்கி உள்ளது.

Story first published: Sunday, December 8, 2019, 22:00 [IST]
Other articles published on Dec 8, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+