Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மெதுவாக ஸ்டார்ட் செய்து.. டாப் கியரை போட்டுத் தூக்கிய ஹிட்மேன்.. உடைந்து நொறுங்கிய சாதனைகள் லிஸ்ட்!

Recommended Video

Rohit Sharma exhausted Virat Kohli |hits century

விசாகப்பட்டினம் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து, 150 ரன்கள் கடந்து ரன் குவித்து பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து ரன் மழை பொழிந்தது. துவக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ராகுல் இருவரும் சதம் கடந்தனர்.

துவக்கத்தில் நிதானம் காட்டிய ரோஹித், பின்னர் அதிரடி ஆட்டம் ஆடி மிரட்டினார். அவர் செய்த சாதனைகள் பட்டியலும் அதிகம்.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

டாஸில் தோல்வி அடைந்த இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது வெஸ்ட் இண்டீஸ். ரோஹித் சர்மா, ராகுல் துவக்கம் அளித்தனர். ராகுல் துவக்கம் முதலே ரன் குவிக்கத் துவங்கினார்.

ரோஹித் நிதானம்

ரோஹித் நிதானம்

ராகுல் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் ரன் குவித்தார். ரோஹித் சர்மா நிதானம் காட்டினார். 50 ரன்கள் குவிக்கும் வரை படு நிதான ஆட்டம் ஆடினார். இடையே 13 பந்துகள் வரை தொடர்ந்து டாட் பால் ஆடி பயமுறுத்தினார்.

சிறிய தடுமாற்றம்

சிறிய தடுமாற்றம்

பல ஷாட்களை அடிக்க முயன்று அதில் தோல்வி அடைந்தார். 70 ரன்கள் அடித்த போது அவர் கொடுத்த கேட்ச் ஒன்றை வெஸ்ட் இண்டீஸ் அணி தவறவிட்டது. அதன் பின், ரோஹித் கியரை மாற்றினார்.

சதம் விளாசல்

சதம் விளாசல்

67 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், 107 பந்துகளில் சதம் கடந்தார். அதன் பின் ராகுல், கோலி ஆட்டமிழந்தனர். அப்போது இன்னும் வேகத்தை கூட்டிய ரோஹித் சர்மா, சிக்ஸர்கள் விளாசினார்.

150 ரன்கள்

150 ரன்கள்

150 ரன்கள் கடந்த ரோஹித், 138 பந்துகளில் 159 ரன்கள் குவித்த அவர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இரட்டை சதம் அடிப்பார் என காத்திருந்த பல ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதிக 150 ரன்கள்

அதிக 150 ரன்கள்

150 ரன்களை கடந்த ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் அதிக முறை 150+ ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடத்தில் நீடிக்கிறார். முன்னதாக 7 முறை 150+ ரன்கள் அடித்து இருந்த ரோஹித், தன் சாதனையை தானே முறியடித்து 8 முறை 150+ ரன்களை எட்டினார்.

அதிக சதம்

அதிக சதம்

ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் கங்குலி, வார்னருடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்து கொண்டார் ரோஹித் சர்மா. இவர்கள் மூவரும் ஒரே ஆண்டில் 7 ஒருநாள் போட்டிகள் சதம் அடித்துள்ளனர். சச்சின் இந்த பட்டியலில் 9 சதங்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.

தனிநபர் ஸ்கோர்

தனிநபர் ஸ்கோர்

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து இந்திய வீரர்களில் அந்த ஆண்டில் அதிகபட்ச ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை செய்து வருகிறார் ரோஹித். 2019ஆம் ஆண்டில் இந்திய வீரர்களில் ரோஹித் அடித்த 159 ரன்களே அதிகபட்சம் ஆகும்.

அதிக சிக்ஸ்

அதிக சிக்ஸ்

சிக்ஸர் மன்னனாக விளங்கும் ரோஹித் சர்மா, இந்தப் போட்டியில் ஐந்து சிக்ஸர்கள் அடித்தார். அத்துடன் இந்த ஆண்டு மட்டும் 77 சிக்ஸர்கள் அடித்துள்ளார் ரோஹித் சர்மா.

மூன்று இடங்கள்

மூன்று இடங்கள்

அதன் மூலம், ஒரே ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் தன் சாதனையை தானே முறியடித்து முதல் மூன்று இடங்களையும் பிடித்தார் ரோஹித் சர்மா. 2019ஆம் ஆண்டில் 77 சிக்ஸ், 2018இல் 74 சிக்ஸ், 2017இல் 65 சிக்ஸ் அடித்துள்ளார் ரோஹித்.

Story first published: Wednesday, December 18, 2019, 20:44 [IST]
Other articles published on Dec 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+