Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரெஸ்ட்லாம் கிடையாது.. நான் ஆடியே தீருவேன்.. தேர்வுக் குழுவுக்கு கோலி மூலம் மெசேஜ் அனுப்பிய சீனியர்!

Recommended Video

IND VS WI | Rohit Sharma sent message to selection committee

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கான தேர்வின் போது மூத்த வீரர் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்க திட்டமிட்டது தேர்வுக் குழு.

ஆனால், தான் அணியில் இடம் பெற்றே தீருவேன் என பிடிவாதமாக இருந்துள்ளார் ரோஹித். அந்த செய்தியை கேப்டன் கோலி மூலம் தேர்வுக் குழுவுக்கு சொல்லி அனுப்பியதாகவும் ஒரு தகவல் வலம் வருகிறது.

சுழற்சி முறை ஓய்வு

சுழற்சி முறை ஓய்வு

இந்திய வீரர்களுக்கு சுழற்சி முறையில் ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதால் வீரர்கள் சோர்வடைந்து விடக் கூடாது என்பதால் ஓய்வு அளிக்கப்படுகிறது.

60 போட்டிகள் ஆடிய ரோஹித்

60 போட்டிகள் ஆடிய ரோஹித்

ரோஹித் சர்மா 2019ஆம் ஆண்டில் ஓய்வில்லாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார். ஐபிஎல் தொடரையும் சேர்த்து சுமார் 60 போட்டிகளுக்கும் மேல் ஆடி இருக்கிறார். அதனால், அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என தேர்வுக் குழு நினைத்தது.

ஓய்வு முடிவு

ஓய்வு முடிவு

வங்கதேச டி20 தொடரில் கேப்டன் கோலி ஓய்வு எடுத்துக் கொண்டது போல, வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் ரோஹித் சர்மாவுக்கு ஒய்வு அளிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ரோஹித் சர்மா அதை மறுக்கப் போவதாக தகவல் வெளியானது. .

தேர்வுக் குழு கூட்டம்

தேர்வுக் குழு கூட்டம்

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை தேர்வு செய்ய தேர்வுக் குழு கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது. அப்போது தேர்வுக் குழு ரோஹித் சர்மாவை அணியில் தேர்வு செய்வார்களா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

ரோஹித் மெசேஜ்

ரோஹித் மெசேஜ்

ரோஹித் சர்மா அந்தக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது. அதனால், கேப்டன் கோலி மூலம் தான் நல்ல பார்மில் இருப்பதால், ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்ற தகவலை தேர்வுக் குழுவுக்கு கூறி இருக்கிறார்.

அணியில் சேர்ப்பு

அணியில் சேர்ப்பு

அதை ஏற்றுக் கொண்ட தேர்வுக் குழு ரோஹித் சர்மாவை வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரை நீக்கவில்லை. ரோஹித் சர்மா தொடர்ந்து துணைக் கேப்டனாக செயல்படுவார்.

Story first published: Monday, November 25, 2019, 21:55 [IST]
Other articles published on Nov 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+