மாபெரும் மைல்கல் சாதனை.. வியக்க வைத்த கோலி.. சச்சின், தோனி, டிராவிட் வரிசையில் கிங் கோலி!

Highest individual score | 2019 Also Rohit On Top

விசாகப்பட்டினம் : இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற கேப்டன் விராட் கோலி இமாலய சாதனை ஒன்றை செய்தார்.

அதிக சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறார் விராட் கோலி.

அதே பட்டியலில், இந்திய அளவில் எட்டாவது வீரராக இடம் பெற்று ஜாம்பவான்கள் வரிசையில் தன் பெயரைப் பொறித்துள்ளார் கோலி.

IND vs WI : இரண்டு அரைசதம்.. வெளுத்துக் கட்டும் இந்திய ஜோடி.. தடுமாறும் வெ.இண்டீஸ்!

கோலி டாஸ் தோல்வி

கோலி டாஸ் தோல்வி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கோலி டாஸில் தோல்வி அடைந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

கோலி ஆடிய போட்டிகள்

கோலி ஆடிய போட்டிகள்

இது விராட் கோலியின் 241வது சர்வதேச ஒருநாள் போட்டி ஆகும். இதுவரை 84 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 75 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் விராட் கோலி ஒட்டுமொத்தமாக 400 சர்வதேச போட்டிகளில் ஆடி உள்ளார்.

400 சர்வதேச போட்டிகள்

400 சர்வதேச போட்டிகள்

உலக அளவில் 400 சர்வதேச போட்டிகள் என்ற மைல்கல்லை எட்டும் 33வது வீரர் ஆவார் கோலி. அதே சமயம், இந்திய அளவில் இந்த மைல்கல்லை எட்டும் எட்டாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

சச்சின் முதல் இடம்

சச்சின் முதல் இடம்

அதிக சர்வதேச போட்டிகளை ஆடிய இந்திய வீரர்கள் வரிசையில் சச்சின் 664 போட்டிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் தோனி 538 போட்டிகளுடன் இருக்கிறார்.

மற்ற சாதனை வீரர்கள்

மற்ற சாதனை வீரர்கள்

ராகுல் டிராவிட் - 509 போட்டிகள், அசாருதீன் - 433 போட்டிகள், சௌரவ் கங்குலி - 424 போட்டிகள், அனில் கும்ப்ளே - 403 போட்டிகள், யுவராஜ் சிங் - 402 போட்டிகள் ஆடி உள்ளனர்.

ஜாம்பவான்கள் வரிசையில் கோலி

ஜாம்பவான்கள் வரிசையில் கோலி

இந்த பட்டியலில் எட்டாவது வீரராக 400 சர்வதேச போட்டிகளை ஆடிய விராட் கோலி இடம் பெற்றுள்ளார். சச்சின், டிராவிட், கங்குலி, கும்ப்ளே உள்ளிட்ட ஜாம்பவான்கள் வரிசையில் மீண்டும் ஒரு சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளார் கோலி.

டக் அவுட் ஆன கோலி

டக் அவுட் ஆன கோலி

இந்தப் போட்டியில் ஆடியதன் மூலம், மைல்கல் சாதனையை செய்த கோலி, இந்தப் போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். பொல்லார்டு பந்துவீச்சில் முதல் பந்தில் டக் அவுட் ஆனார் கோலி.

முதல் விக்கெட் கூட்டணி

முதல் விக்கெட் கூட்டணி

இரண்டாவது ஒருநாள் போட்டியில் ராகுல் சதம் கடந்து 102 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மாவும் சதம் கடந்து மிரட்டலாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் இணைந்து 227 ரன்கள் குவித்தனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
IND vs WI : Virat Kohli breaks into 400 International matches milestone
Story first published: Wednesday, December 18, 2019, 17:00 [IST]
Other articles published on Dec 18, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X