Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

29 பந்தில் 70 ரன்.. நாடி நரம்பெல்லாம் சிக்ஸர் வெறி.. தாண்டவம் ஆடிய இந்திய கேப்டன்!

Recommended Video

Kohli's verithanama gameplay against West indies | IND vs WI

மும்பை : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை இப்படி வெறி கொண்டு பேட்டிங் ஆடி இருப்பாரா? என தெரியவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான் மூன்றாவது டி20 போட்டியில் அப்படி ஒரு ஆட்டம் ஆடினார் கோலி.

முதல் டி20 போட்டியில் ஆடியதை விட சிறப்பாக சிக்ஸர் வேட்டையாடி மிரள வைத்தார் கோலி. 29 பந்தில் 70 ரன்கள் குவித்து முக்கியமான போட்டியில் அணிக்கு தூணாக இருந்தார்.

மூன்றாவது டி20 போட்டி

மூன்றாவது டி20 போட்டி

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே ஆன டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் 1 - 1 என சம நிலையில் இருந்தன. வெற்றியாளரை முடிவு செய்யும் மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா, ராகுல் இந்திய அணிக்கு மிரட்டலான துவக்கம் அளித்தனர்.

ரோஹித் அதிரடி

ரோஹித் அதிரடி

ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பிய நிலையில், முக்கியமான இந்தப் போட்டியில் நிலைத்து நின்று ஆடி 34 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். 5 சிக்ஸர்கள் அடித்து மலைக்க வைத்தார் அவர்.

ராகுல் அபார ஆட்டம்

ராகுல் அபார ஆட்டம்

உடன் ஆடிய ராகுலும் அவருக்கு ஈடு கொடுத்து அதிரடி ஆட்டம் ஆடினார். ராகுல் கடைசி ஓவரில் தான் ஆட்டமிழந்தார். அவர் 4 சிக்ஸர்கள் அடித்து 56 பந்துகளில் 91 ரன்கள் குவித்து அசத்தினார்.

ரிஷப் பண்ட் ஏமாற்றம்

ரிஷப் பண்ட் ஏமாற்றம்

ரோஹித் ஆட்டமிழந்த உடன் கோலி இறங்கும் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்த ரிஷப் பண்ட் 2 பந்துகளில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். அதிரடியாக ஆட வேண்டி வந்த அவர் தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விராட் கோலி பேட்டிங்

விராட் கோலி பேட்டிங்

அடுத்து கோலி நான்காம் வரிசையில் களமிறங்கினார். ரோஹித் - ராகுல் ஜோடி அதிரடியாக ஆடி பெரிய அளவில் ரன் குவிக்க தளம் அமைத்து கொடுத்த நிலையில், கோலி அதை தொடர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.

சிக்ஸ் மழை

சிக்ஸ் மழை

அதிரடி வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக எத்தனை பெரிய இலக்கு நிர்ணயித்தாலும் அது எட்டக் கூடிய ஒன்றாகவே இருக்கும் என்பதால், கோலி நேரடியாக சிக்ஸர் அடித்து குவிக்கத் துவங்கினார்.

19வது ஓவர்

19வது ஓவர்

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு வீசிய 19வது ஓவரில் கோலி தாண்டவம் ஆடினார். 3 சிக்ஸ், 1 ஃபோர் உட்பட அந்த ஓவரில் மட்டும் 27 ரன்கள் குவித்தார் கோலி.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

29 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார் கோலி. சிக்ஸர் மன்னனான ரோஹித் சர்மா 5 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து 71 ரன்கள் எடுத்த நிலையில், கோலி அவரையும் மிஞ்சி, 7 சிக்ஸர்கள் அடித்து 70 ரன்களை எட்டி இருந்தார்.

வெ.இண்டீஸ் அணிக்கு சவால்

வெ.இண்டீஸ் அணிக்கு சவால்

ரோஹித் சர்மா, ராகுல் மற்றும் கோலியின் ரன் குவிப்பால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 241 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்தது இந்திய அணி.

Story first published: Wednesday, December 11, 2019, 22:03 [IST]
Other articles published on Dec 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+