Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: டெஸ்ட் மேட்ச்சில் டி20 ஸ்கோரை எடுத்த வெஸ்ட் இண்டீஸ்.. 44 ஓவரில் ஆல் அவுட்.. ஸ்கோர் என்ன?

அகமதாபாத்: அகமதாபாத்தில் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 162 ரன்களுக்குச் சுருண்டது. டெஸ்ட் போட்டியில் டி20 ஸ்கோர் மட்டுமே எடுத்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. முகமது சிராஜின் அனல் பறக்கும் வேகமும், ஜஸ்பிரித் பும்ராவின் துல்லியமான பந்துவீச்சும், குல்தீப் யாதவின் சுழலும் வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் வரிசையைச் சிதறடித்தன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் முடிவு, அவர்களுக்குப் பெரும் தலைவலியாக மாறியது. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, முகமது சிராஜ் தனது வேகத்தால் மிரட்டத் தொடங்கினார். ஜாம்பவான் சந்தர்பாலின் மகன் டேகனரைன் சந்தர்பாலை டக் அவுட் ஆக்கி, இந்தத் தொடரின் முதல் விக்கெட்டை சிராஜ் கைப்பற்றினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஜான் கேம்ப்பெல்லை (8 ரன்கள்) ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்த, வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

IND vs WI West Indies Crumbles to 162 All Out Siraj Bumrah Pace Attack Dominates First Innings in Ahmedabad Test

அதன்பிறகு களமிறங்கிய வீரர்களும் இந்தியப் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அதிரடியாக ஆட முயன்ற பிராண்டன் கிங் (13 ரன்கள்), சிராஜின் அற்புதமான இன்ஸ்விங்கரில் போல்ட் ஆகி வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்த அலிக் அதானேஸையும் (12 ரன்கள்) சிராஜ் தனது வலையில் சிக்க வைத்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பே 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலையில் இருந்தது.

சிராஜ் ஆதிக்கம், பும்ரா, குல்தீப் ஆதரவு

மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, கேப்டன் ரோஸ்டன் சேஸும், ஷாய் ஹோப்பும் நிதானமாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்க முயன்றனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 48 ரன்கள் சேர்த்த நிலையில், ஷாய் ஹோப்பை (26 ரன்கள்) குல்தீப் யாதவ் தனது சுழலில் சிக்க வைத்து ஆட்டமிழக்கச் செய்தார். சிறிது நேரத்திலேயே, கேப்டன் சேஸும் (24 ரன்கள்) சிராஜின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணியின் சரிவு மீண்டும் தொடங்கியது.

பின்வரிசை வீரர்களில் ஜஸ்டின் கிரேவ்ஸ் மட்டும் சற்று நேரம் தாக்குப்பிடித்து 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில், முகமது சிராஜ் அபாரமாகப் பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவருக்கு உறுதுணையாக ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். முதல் நாளிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைந்த ரன்களில் சுருட்டியதன் மூலம், இந்திய அணி இந்தப் போட்டியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

Story first published: Thursday, October 2, 2025, 14:15 [IST]
Other articles published on Oct 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+