Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை: இந்திய அணி அறிவிப்பு.. வைபவ் சூர்யவன்ஷி, திலக் வர்மாவுக்கு இடம்

மும்பை: ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அணிக்கு திலக் வர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியை சேர்ந்த ரஜத் படிதார் துணை கேப்டனாக செயல்படுவார்.

அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, ஹர்ஷித் ராணா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோரும் இந்த இந்திய ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 2026 ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை தொடர், வரும் நவம்பர் 19 முதல் கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளுடன் ஒரே குழுவில் இடம்பெற்றுள்ளது.

Rising stars India

ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி நவம்பர் 29 அன்று நடைபெறவுள்ளது. கடந்த பதிப்பில் ஜிடேஷ் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய ஏ அணி, அரைஇறுதியில் வங்கதேச ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

ரஞ்சி கோப்பை: ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷ் துபே அபாரம்

ரஞ்சி கோப்பை: ஒரே இன்னிங்சில் 9 விக்கெட்டுகள் வீழ்த்திய ஹர்ஷ் துபே அபாரம்

இந்திய ஏ அணி: கேப்டன் திலக் வர்மா, துணை கேப்டன் ரஜத் படிதார், அபிஷேக் சர்மா, வைபவ் சூரியவன்ஷி, விக்கெட் கீப்பர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் குமார் குஷாக்ரா, ரிங்கு சிங், சூரியான்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது, விப்ராஜ் நிகாம், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியான், ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷத் கான்.

நவம்பர் 19 வியாழக்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு UDST மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. அன்றைய தினம் பிற்பகல் 1:00 மணிக்கு WEICS மைதானத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. நவம்பர் 20 வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு UDST மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகளும், பிற்பகல் 1:00 மணிக்கு WEICS மைதானத்தில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகளும் களம் காணுகின்றன.

நவம்பர் 21 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு UDST அரங்கத்தில் இலங்கை ஹாங்காங் போட்டியும், பிற்பகல் 1:00 மணிக்கு WEICS அரங்கத்தில் வங்கதேசம் ஆப்கானிஸ்தான் போட்டியும் நடைபெறவுள்ளன. நவம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு UDST மைதானத்தில் யுஏஇ மற்றும் நேபாளம் அணிகள் சந்திக்கின்றன. அதே நாளில் பிற்பகல் 1:00 மணிக்கு WEICS மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

நவம்பர் 23 திங்கள்கிழமை காலை 9:00 மணிக்கு UDST அரங்கத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும், பிற்பகல் 1:00 மணிக்கு WEICS அரங்கத்தில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகளும் போட்டியிடுகின்றன. நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை காலை 9:00 மணிக்கு UDST மைதானத்தில் இந்தியா - யுஏஇ ஆட்டமும், பிற்பகல் 1:00 மணிக்கு WEICS மைதானத்தில் பாகிஸ்தான் - நேபாளம் ஆட்டமும் நடைபெறுகின்றன.

IND vs NZ: ரிஷப் பண்ட் உடல்தகுதி தேர்வில் தோல்வி.. டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? அடுத்தது என்ன?

Also Read

IND vs NZ: ரிஷப் பண்ட் உடல்தகுதி தேர்வில் தோல்வி.. டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? அடுத்தது என்ன?

தொடரின் முதல் அரைஇறுதிப்போட்டி நவம்பர் 26 வியாழக்கிழமை பிற்பகல் 1:00 மணிக்கு WEICS மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது அரைஇறுதிப்போட்டி நவம்பர் 27 வெள்ளிக்கிழமை பிற்பகல் 1:00 மணிக்கு அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, தொடரின் இறுதிப்போட்டி நவம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00 மணிக்கு WEICS அரங்கத்தில் நடைபெறும்.

Story first published: Monday, November 2, 2026, 21:55 [IST]
Other articles published on Nov 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+