கொஞ்சம் நின்னு இருந்தா சோலி முடிச்சிருக்கும்.. இலங்கையை 306 ரன்கள் அடிக்கவிட்ட இந்தியா.. ஷனாகா சதம்
கவுஹாத்தி : இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
டாஸ் வென்ற இலங்கை கேப்டன் ஷனாகா, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதனையடுத்து, காயத்திலிருந்து திரும்பிய ரோகித் சர்மா, முதல் முறையாக சுப்மான் கில்லிடம் ஜோடி சேர்ந்தார்.
தொடக்கம் முதலே இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. இதன் மூலம் ஆட்டத்தின் 6.4 வது ஓவரிலேயே இந்திய அணி அரைசதம் கடந்தது.

143 ரன்கள்
முதலில் பொறுமையாக விளையாடிய ரோகித் பிறகு ரஜித்தா ஓவரில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து ரன் குவித்தார்.இதனைத் தொடர்ந்து ரோகித் தனது அனுபவ ஆட்டத்தின் மூலம் ரன்களை அடிக்கும் வேகத்தை அதிகபடுத்தினார். மறுமுனையில் அதிரடி காட்டிய சுப்மான் கில் 60 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 143 ரன்களை எடுத்தது

45வது சதம்
16 மாதத்திற்கு ரோகித் சர்மா சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 67 பந்துளில் ரோகித் சர்மா 83 ரன்கள் எடுத்து போல்ட் ஆனார். இந்த இன்னிங்சில் 9 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதனைத் தொடர்ந்து விராட் கோலி தனது வழக்கமான அதிரடியை காட்டினார். ஸ்ரேயாஸ், ஹர்திக், அக்சர் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, மறுமுனையில் விராட் கோலி தனது 45வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார்.

சிராஜ் அபார பந்துவீச்சு
இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்கள் எடுத்துள்ளது. 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தனது அபார பந்துவீச்சு மூலம் முகமது சிராஜ் 2 விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். நிசாங்கா பொறுப்புடன் விளையாடி 72 ரன்கள் சேர்த்தார்.

ஷனாகா சதம் வீண்
தனஞ்செய்யா மற்றும் கேப்டன் ஷனாகா பொறுப்புடன் விளையாடி பார்ட்னர்ஷிப்பை அமைத்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 62 ரன்கள் சேர்த்த நிலையில், தனஞ்செய்யா 47 ரன்கள் சேர்த்த நிலையில், பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, தனி ஆளாக போராடிய ஷனாகா சதம் விளாசினார். எனினும் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Click it and Unblock the Notifications