For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. புஜாராவுக்கு பதில் யார்?

பார்பிடாஸ் : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டெஸ்ட் போட்டி வரும் 12-ம் தேதி டோமினிக்கா நகரில் தொடங்குகிறது.

இதற்காக பயிற்சி செய்யும் விதமாக இந்திய அணி வீரர்கள் 10 நாட்களுக்கு முன்பே வெஸ்ட் இண்டீஸ்க்கு சென்று இருக்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் நகரில் உள்ள கிளப் அணி உடன் இந்திய அணி வீரர்கள் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

India Playing xi for west indies 1st test starts from july 12

இந்த நிலையில் அதன் அடிப்படையில் தான் பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல் டெஸ்டில் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா தன்னுடைய இடத்தில் உறுதி செய்து கொள்வார்.

மூன்றாவது இடத்தில் தற்போது புஜாரா இல்லாததால் அந்த இடத்தில் ஜெய்ஸ்வால் அல்லது ருதுராஜ் களம் இறங்க வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று நடு வரிசையில் நான்காம் இடத்தில் விராட் கோலியும், ஐந்தாவது இடத்தில் ரகானேவும் களமிறங்க கூடும். இதுபோன்று ஆறாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக கே எஸ் பரத் அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று 7வது இடத்தில் ஜடேஜாவும் 8வது இடத்தில் அஸ்வினும் விளையாடுவார்கள்.

ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் ஒன்பதாம் இடத்தில் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பு தரப்படும். இல்லையெனில் மூன்று வேக பந்துவீச்சாளராக முகமது சிராஜ், ஜெய்தேவ் உணாட்கட், ஷர்துல் தாக்கூர் ஆகியோர் களமிறங்க கூடும். பேட்டிங் வரிசையில் ரிஷப் பந்த் இல்லாததால் இந்திய அணி கீழ் வரிசையில் பேட்டிங்கை வலுப்படுத்த நினைக்கும்.

இதனால் ஐந்து பேட்ஸ்மேன், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இரண்டு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் கவுண்டர் என்ற காம்பினேஷனில் இந்தியா களமிறங்க கூடும். டோமினிக்காவில் விராட் கோலியை தவிர வேறு யாரும் இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .

Story first published: Tuesday, July 4, 2023, 12:57 [IST]
Other articles published on Jul 4, 2023
English summary
India Playing xi for west indies 1st test starts from july 12 வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன்.. புஜாராவுக்கு பதில் யார்?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+